சுவிட்சர்லாந்திலும் அவசரகால நிலை பிரகடனம்... மீறினால் சமூகவிரோத செயற்பாடு என அறிவிப்பு..
அவசரமாக இன்று கூடிய பாராளுமன்று அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது. அதன் பிரகாரம் அத்தியாவசிய தேவையான உணவுப்பொருள் விற்பனை நிலையங்கள் மருந்தகங்கள் தவிர்ந்த விற்பனை நிலையங்கள், களியாட்ட நிலையங்கள், பொழுதுபோக்கு நிலையங்கள், விளையாட்டு நிலையங்கள் யாவற்றையும் மறு அறிவித்தல்வரை மூடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
சகலவிதமான ஒன்றுகூடல்கள் , நிகழ்சிகளுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இத்தடை உத்தரவுகளை மீறுதல் சமூகவிரோத செயலென கணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸ் பிரதானி வூக்லெர் தெரிவித்துள்ளார்.
பெரும்பாலான பாடசாலைகள் தொலைதூரக்கல்வியை ஆரம்பித்துள்ளது. மாணவர்கள் வீட்டிலிருந்தவாறு கணனியில் தமது பாடசாலைக்கல்வியை தொடரும் இத்திட்டத்தினை விரைவில் சகல பாடசாலைகளும் நடைமுறைப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கொரோனா வைரஸ் தொடர்பாக போலிச் செய்கிகள் பரப்பப்படுவதாகவும் அது தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் பொதுமக்களை அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இவ்வாறு கிடைக்கபெறுகின்ற செய்திகள் மீது கிளிக்செய்யவோ அன்றில் அவற்றை தொடர்ந்து மற்றவர்களுக்கு அனுப்பவோ வேண்டாம் என மக்கள் கேட்கப்பட்டுள்ளனர்.
பூட்டிய அறைகளில் இடம்பெறும் உடற்பயிற்சி நிலையங்கள், நீச்சல் தடாகங்கள் என்பவற்றை தடைசெய்தபோதும் மக்களை முடியுமானவரை பொதுவெளியில் சுத்தமான காற்றோட்டத்தில் தங்கள் உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுமாறும் நபர்களிடையே இடைவெளியை பேணிமாறும் வேண்டியுள்ளனர்.
0 comments :
Post a Comment