Tuesday, March 31, 2020

காணொளி தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மருத்துவ சேவையை ஆரம்பிப்பதற்கான உத்தேசத்திட்டம்

காணொளி தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வைத்தியசாலைகளில் மருத்துவ சேவையை ஆரம்பிப்பதற்கான உத்தேசத்திட்டம் ரிச்வே சிறுவர் வைத்திய சாலையில் நேற்றையதினம் ஆரம்பமானது.

இதன் போது முதல்கட்டமாக சிறுவர்களுக்கான நரம்பியல் நோய் நிபுணர் அனுருத்த பாதெனிய கையடக்க தொலைபேசியில் காணொளி தொடர்பு மூலம் சிறுவர் ஒருவருக்கு சிகிச்சையளித்துள்ளார்.

இதன் மூலம் தற்போதைய கொரோனா நோய் தொற்றின் காரணமாக வைத்தியசாலைகளுக்கு வெளிநோயாளர் பிரிவிற்கு வருகை தருவதில் சிரமங்களை எதிர்கொள்ளும் நோயாளர்கள் வீட்டிலிருந்தவாறே தங்களுக்குரிய சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளக் கூடியவகையில் இந்த வேலைத்திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளது.

இதற்காக விசேட நடமாடும் வேலைத்திட்டம் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியின் ஆலோசனைக்கு அமைய சுகாதார அமைச்சு முன்னெடுத்துள்ளது.

0770773333 என்ற கையடக்க தொலைபேசி இலக்கத்தின் மூலம் இதுதொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com