Saturday, March 21, 2020

கொரோனாவினால் வரும் நியுமோனியாவைக் கட்டுப்படுத்த மருந்து கண்டுபிடித்துள்ளது ஜப்பான்!

கொரோனா வைரசு பரவுவதன் மூலம் தோன்றும் நியுமோனியாவைக் கட்டுப்படுத்துவதற்கான மருந்தினை ஜப்பானிய வைத்திய ஆய்வாளர்கள் குழு கண்டுபிடித்துள்ளது. ‘அவிகன்’ எனும் அந்த மருந்து வெற்றிகரமாக செயற்படுகின்றது எனத் தெரியவருகின்றது.

இன்புளுவென்சாவிற்கு எதிராகவே இந்த மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

முதன் முதலில் வைரசு தொற்றுக்குள்ளான சீனாவிலும் ஜப்பானிலும் நோய்த் தொற்றுக்குரியோர் தொகை அதிகரித்த போது இந்த மருந்து கொடுக்கப்பட்டு, அதில் வெற்றி கண்டுள்ளார்கள் எனத் தெரியவருகின்றது.

கொரோனா நோயாளி ஒருவரைக் குணப்படுத்துவதற்காக ஏறத்தாள 11 நாட்கள் செலவாகின்ற போதும், இந்த மருந்தின் மூலம் 4 நாட்களுக்குள் கொரோனா நோயாளியின் நியுமோனியா இல்லாமலாகி அவர் குணமடைகின்றார் எனத் தெரியவருகின்றது.

இந்தச் செய்தி வௌிவந்ததைத் தொடர்ந்து, 3 நாட்களின் பின்னர் இந்தோனேசியா தங்கள் நாட்டிலுள்ள நோயாளிகளைக் குணப்படுத்துவதற்காக இந்த மருந்தை இறக்குமதி செய்ததாக அந்நாட்டின் ஜனாதிபதி நேற்றைய தினம் ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார்.

ஆட்கொல்லியான கொரோனா வைரசு தாக்கத்திலிருந்து ஈரான் மக்களைப் பாதுகாப்பதற்காக அந்நாட்டுக்கு இலவசமாக இந்த மருந்தினை வழங்குமாறு ஜப்பான் வௌிவிவகார அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment