தாவடிக் கிராமத்தில் கிருமிநாசினி விசிறும் நடவடிக்கை இன்று காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் கண்டுபிடிக்கப்பட்ட முதலாவது கொரோனா வைரஸ் தொற்றாளர் வசிக்கும் தாவடிக் கிராமத்தில் கிருமிநாசினி விசிறும் நடவடிக்கை இன்று காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சிறப்பு அதிரடிப் படையினர் இந்தப் பணியை முன்னெடுத்திருந்தனர். கொழும்பிலிருந்து எடுத்துவரப்பட்ட புதிய இயந்திரத் தொகுதியால் கிருமிநாசினி விசிறும் பணி முன்னெடுக்கப்படுகிறது.
இதேவேளை, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் வசிக்கும் வீடு உள்ள தாவடிக் கிராமத்தில் வசிப்போர் வீடுகளில் சுயதனிமைப்படுத்தலுக்கு படுத்தப்பட்டுள்ளனர்.
அவர்களை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், பொலிஸார் கண்காணித்து வருகின்றனர்.
0 comments :
Post a Comment