தமிழ் அரசுக் கட்சியில் போட்டியிடுவதற்கு சீட்டுக்கேட்கின்றார் முஹமட் பாருக்!
வருகின்ற பொது தேர்தலில் தமிழரசு கட்சி மூலமாக அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு அக்கரைப்பற்றை சேர்ந்த மனித உரிமைகள் சட்டத்தரணி ஆ. முஹமட் பாருக் விண்ணப்பித்து உள்ளார் என்று தெரிய வருகின்றது.
இதன்படி இவர் இதற்கான வேண்டுகோளை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் கிருஷ்ணபிள்ளை துரைராஜசிங்கத்துக்கு நேரடியாக சமர்ப்பித்து உள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் சட்டத்தரணி ஆ. பாறூக்கை ஊடகவியலாளர் ஒருவர் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் தெரிவித்தவை வருமாறு,
தமிழரசு கட்சியில் முஸ்லிம் தலைவர்கள் தேர்தல் கேட்ட ஒரு காலம் இருந்தது, அந்த வகையில் தமிழரசு கட்சி மூலமாக வருகின்ற பொது தேர்தலில் நிற்கின்ற விருப்பம் என்னால் வெளிப்படுத்தப்பட்டு இருக்கின்றது,
தமிழ் - முஸ்லிம் மக்களுக்கு இடையிலான உறவு பாலமாக செயற்படுகின்ற வாய்ப்புக்காக இதை விரும்புகின்றேன், எனது வேண்டுகோளை துரைராஜசிங்கம் கட்சி தலைமைக்கு தெரியப்படுத்தி உள்ளார் என்று அறிகின்றேன்.
வேட்பாளர்களை தீர்மானிப்பதற்காக தமிழரசு கட்சி தலைமை கொழும்பில் கூடுகின்றது என்றும் எதிர்வரும் 06 ஆம் திகதி அவர்களின் தீர்மானம் தெரிய வரும் என்றும் எனக்கு துரைராஜசிங்கம் அறிய தந்து உள்ளார்.
எனக்கு இதர தமிழ் கட்சிகளில் மிக நெருக்கமான நண்பர்கள் உள்ளனர். எனக்கு வாய்ப்பு தருவதற்கு அவர்கள் ஏற்கனவே சமிக்ஞை காட்டி இருக்கின்றார்கள். ஆயினும் தமிழரசு கட்சி மூலமான வாய்ப்பையே நான் விரும்புகின்றேன் என்றுள்ளார்.
0 comments :
Post a Comment