Monday, March 30, 2020

நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

ஊடரங்குச் சட்டம் அமுலில் இருக்கும் காலப் பகுதியில் பெருமளவிலானோர் வீட்டிலேயே தங்கியிருப்பதால் நீர்ப்பாவனை அதிகரித்துள்ளது. தற்போது வரட்சியான காலநிலை நிலவுவதால் நீர்மூலங்களில் நீரின் மட்டம் குறைவடைகின்றது. எனினும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நீர்விநியோகத்தை மட்டுப்படுத்தாமல் தொடர்ந்து வழங்குவதற்கு நீர்விநியோகச் சபை கவனம் செலுத்துகின்றது.

திடீர் நீர்விநியோகத் தடை, நீர் கட்டணப் பட்டியல் தொடர்பான தகவல்கள் உள்ளிட்ட விபரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

071 93 99 999 இலக்கத்திற்கு குறுந்தகவல்களை அனுப்புவதன் மூலம் விபரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்து.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com