Friday, March 27, 2020

இலங்கையில் கொரோனா இன்னும் கட்டுப்பாட்டில் இல்லை:அதிர்ச்சி தகவல்!

இலங்கையில் கொரோனா வைரஸ் இன்னும் முழுமையாக கட்டுப்படுத்தப்படவில்லை என்று கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனை பணிப்பாளர் மருத்துவர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் குறித்து நாட்டின் நிலைமையை தெளிவுபடுத்தும் வகையில் இன்று வெள்ளிக்கிழழை காலை ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் கூறியிருக்கின்றார்.

தொடர்ந்து பேசிய அவர், வாய்க் கவசத்தை அணிவதால் வைரஸிடம் இருந்து காப்பாற்றப்படலாம் என்று நினைப்பது தவறு.

தொடுகை மற்றும் மற்றவர்களுடன் நெருக்கமாக இருப்பதால் இந்த வைரஸ் பரவுகின்றது. ஆகவே மக்கள் இந்த ஊரடங்குச் சட்டம் நாட்களில் வீடுகளில் தங்கியிருப்பதே உசிதம். அத்;தியாவசிய தேவைகளுக்காக மட்டும் வெளியே வந்தால் பிரச்சினையில்லை.

இன்னும் சிலர் ஊரடங்குச் சட்டத்தையும், வைரஸின் தாக்கத்தையும் மதிக்காமல் உலா வருவது நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டத்தை மேலும் மாதங்களுக்கு நீடிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துவிடுவதாக அமையும் என்று எச்சரித்தார் அவர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com