அதிக விலைக்கு முகக் கவசங்களை விற்பனை செய்யும் மருந்தகங்களின் அனுமதிப்பத்திரங்கள் இரத்து செய்யப்படும்!
மீள பயன்படுத்த முடியாத சாதாரண முகக் கவசம் 50 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது. என்95 வகை முகக் கவசத்திற்கு 325 ரூபா உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த விலைகளை விட அதிகரித்த விலையில் முகக் கவசங்களை விற்பனை செய்யும் மருந்தகங்களின் அனுமதிப்பத்திரங்கள் இரத்து செய்யப்படும் என தேசிய மருந்தகங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை தெரிவித்துள்ளது.
முகக்கவசங்களை அதிக விலைக்கு விற்பனை செய்யும் அல்லது அவற்றை பதுக்கும் நபர்களை சுற்றிவளைக்கும் நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி டொக்டர் கமல் ஜயசிங்க குறிப்பிட்டார்.
இதேவேளை, இறக்குமதி செய்யப்படும் முகக்கவசங்கள், தொற்று நீக்கிகள் உள்ளிட்ட கிருமி நீக்கிகள் அனைத்திற்கும் விதிக்கப்பட்ட அனைத்து வரிகளும் இன்று முதல் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இறக்குமதிப் பொருட்கள் விசேட வர்த்தக பொருள் வரி சட்டத்தின் கீழ் உட்படுத்தப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment