கொரானோவை விரட்ட நாங்கள் வருகிறோம் என்கிறார் சீன ஜனாதிபதி!
இலங்கை அரசாங்கம் மற்றும் நாட்டு மக்களை பெரும் பீதிக்கு உள்ளாக்கிவரும் கொரானோ வைரசு தொற்றுதலைத் தடுப்பதற்குத் தேவையான உதவிகளைச் செய்வதற்கு சீன அரசின் விசேட வைத்தியகுழுவொன்றை எந்தநேரம் என்றாலும் இலங்கைக்கு அனுப்பிவைப்பதற்குத் தான் தயாராக இருப்பதாக சீன ஜனாதிபதி இலங்கை அரசாங்கத்திற்குத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள சீனத் தூதுவர் மூலமாக இந்தத் தகவலை சீன ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் உதவி கோருகின்ற எந்த நேரத்திலும்.அனுபவம்மிக்க விசேட குழுவொன்றை அனுப்பிவைப்பதற்குத் தயாராகவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது கொரானோ வைரசு தொடர்பில் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்ககைள் தொடர்பில் சீன அரசு திருப்தி கண்டுள்ளதாகவும், சீன அரசின் உதவி கிடைத்தால் வெகுவிரைவில் கொரானோவை இலங்கையிலிருந்து துரத்தியடிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :
Post a Comment