சுவிட்சர்லாந்து போதகர் கொடுத்த பரிசு! மன்னார் உள்ளிட்ட சிலபகுதிகளில் மீண்டும் ஊரடங்கு நீடிப்பு!
மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் போன்ற வட மாகாண மாவட்டங்கள் ஐந்தில் மீண்டும் ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 24 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 7.00 மணி ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும்.
நாளை காலை 6.00 மணிக்கு தளர்த்தப்படவுள்ள ஊரடங்குச் சட்டம் மீண்டும் பிற்பகல் 2.00 மணிக்கு அமுலுக்குவரும். வட மாகாணத்திலுள்ள மேற்படிஐந்து மாவட்டங்களிலுமுள்ள மக்கள் எக்காரணம் கொண்டும் வௌிச்செல்ல இயலாது. சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த கிறிஸ்தவ போதகர் ஒருவர் மூலம் கொரோனா வைரசுத் தாக்குதலுக்குப் பலர் ஆளாகியிருப்பதனால் அந்த மாவட்டங்களைச் சேர்ந்த மக்களை குறித்த வைரசுத் தொற்றிலிருந்து காப்பதற்காகவே ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது எனத் தெரியவருகின்றது.
வட மாகாண மக்களின் உயிர்களைப் பாதுகாப்பதற்காக அரசாங்கத்திற்குப் பூரண ஒத்துழைப்பு வழங்குமாறு அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
0 comments :
Post a Comment