தற்போதைய சூழ்நிலையில் திருமண நிகழ்வுகள் நடத்தப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் திருமண நிகழ்வுகள் நடத்தப்பட்டால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் உட்பட உரிய பிரிவிடம் இது தொடர்பில் கோரிக்கை விடுப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கேட்டுள்ளது.
பொறுப்புடைய குடிமகனாக இந்த சந்தர்ப்பத்தில் அதிக அவதானம் செலுத்த வேண்டும். தனிப்பட்ட நோக்கத்திற்காக அல்லது பொது நோக்கத்திற்கா என தீர்மானிக்குமாறு சங்கத்தின் உதவி செயலாளர் வைத்தியர் நவீன் டி சொய்ஸா தெரிவித்துள்ளார்.
மக்கள் அவ்வாறான பொறுப்புகளை புரிந்து செயற்படவில்லை என்றால் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் நாட்டினுள் பரவுவதனை தடுப்பதற்காக அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானத்திற்கு அவர் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment