Friday, March 20, 2020

மாணிக்க வியாபாரியின் குடும்பத்தால் இரத்தினபுரிக்கே ஆபத்து! மேலும் பலருக்கு கொரோனா!

கொவிட் 19 தாக்கத்திற்குள்ளாகியுள்ள இரத்தினபுரியின் பிரபல மாணிக்க வியாபாரியின் மனைவி மற்றும் 12 வயதுடைய அவரது மகள் இருவரும் ஐ.டீ.எச். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சபரகமுவ மாகாண சுகாதார சேவைப் பணிப்பாளர் கபில கன்னங்கர தெரிவித்தார்.

'குறித்த மாணிக்க வியாபாரி தான் வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்கின்ற அம்பகஹயட பிரதேசம் உள்ளிட்ட பல பகுதிகளுக்குச் சென்று வருபவராக இருந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. அவருடன் நெருங்கிப் பழகியவர்கள் தத்தமது வீடுகளில் தனித்து நிற்குமாறு வேண்டுகிறோம். அவர்களின் உடலில் ஏதேனும் மாற்றங்கள் நிகழ்வது தெரிந்தால் உடனடியாக வைத்தியசாலைக்குச் செல்ல வேண்டும். இன்னும் பலர் இந்த வைரசின் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளனர்.

குறித்த வைரசு தாக்குதல் தொடர்பில் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் சுகாதரப் பிரிவு நாளாந்தம் கூடிய கவனம் செலுத்தி வருகின்றது. தற்போதைக்கு இரத்தினபுரி வைத்தியசாலையில் சந்தேகத்திற்கிடமான 11 நோயாளிகள் மருத்துவ உதவி பெற்றுவருகின்றனர்' எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com