Wednesday, March 18, 2020

பிள்ளையான் தோற்பது உறுதியாம்! ஜோதிடரானார் கருணா....

திகாமடுல்லை மாவட்டத்தில் போட்டியிவதற்காக தமிழர் மகா சபையின் ஊடாக வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளார் புலிகள் அமைப்பின் மட்டு – அம்பாறை முன்னாள் தளபதி கருணா எனப்படுகின்ற விநாயகமூர்த்தி முரளிதரன்.

அம்பாறை மாவட்ட செயலகத்தில் இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்த பின்பு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கருணா, மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னாள் கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) எதிர் வரும் பாராளுமன்ற தேர்தலில தோல்வி அடைவது உறுதி தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்து பேசிய அவர் :

இத்தேர்தல் இணைந்து போட்டியிடுவதற்கு அ ழைப்பு விடுத்திருந்தபோதும், எமது அழைப்பினை பிள்ளையான் நிராகரித்தார். தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி வேட்பாளர் தெரிவில் மதுபாணசாலை உரிமையாளர்களையும் , வட்டிக்கு பணம் கொடுப்பவர்களையும் நிறுத்தியுள்ளது. இவ்வாறனவர்கள் எவ்வாறு மக்களுக்குசேவை செய்யப் போகின்றனர் என்பதே எனது கேள்வி.

அம்பாறை மாவட்டத்தில் ஏன் நான் போட்டியிடுகிறேன் என்றால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அம்பாரை மாவட்டத்தில் மக்களை புறந்தள்ளி உள்ளது. கடந்த 3 மாதகாலமாக மக்களது பிரச்சினைகளை நேரில் சென்று அவதானித்து அவர்களது குறைகளை தீர்த்து வருகின்றேன்.

கடந்த காலங்களில் அம்பாறை மாவட்டத்திலிருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் மக்களது பிரச்சினைகளை காது கொடுத்து கேட்கவில்லை. அதனால் தான் நான் இங்கு களம் காண வந்துள்ளேன். நாங்கள் அம்பாறை மாவட்டத்தில் இரண்டு ஆசனங்களை பெற்று பெரு வெற்றி பெறுவோம் இந்தத் தேர்தலுடன் அம்பாறை மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பும் தமிழ் மக்களால் துடைத்தெறிய படுவார்கள் என்பதை உறுதிப்படுத்த கூறிக்கொள்கிறேன் என்றார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com