ஹிஸ்புல்லா என்ற ஆடு நனையுதென மோகன் என்ற ஓநாய் மட்டக்களப்பில் நாளை ஊழைக்கு தயார்..
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருக்ககூடியவர்கள் என்று சந்தேகிக்கப்படுபவர்களை தனிமைப்படுத்தி அவதானிப்பதற்காக ஹிஸ்புல்லாவின் மட்டக்களப்பு கம்பஸ்சை அரசு தெரிவு செய்துள்ளது.
இலங்கை அரசின் இந்த முடிவில் அரசியல் பின்நோக்கங்கள் இல்லாமல் இல்லை. இருந்தாலும் முடிவானது „நெல்லுக்கிறைத்த நீர் வாயக்கால் வழியோடி புல்லுக்குமங்கே பொசியுமாம்" என்றாற்போல் மட்டக்களப்பில் தமிழர் இருப்பை தக்கவைப்பதற்கு சாதகமாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகங்களும் இல்லை.
தமிழ் மக்களின் வாக்குகளை அபகரித்து தமிழ் மக்களுக்கே ஆப்பு வைக்கும் கைங்கரியத்தை கடந்த இரு தசாப்தங்களுக்கு மேலாக மேற்கொண்டுவரும் ஹிஸ்புல்லாவின் மட்டக்களப்பு கம்பஸின் பின்னணி ஆபத்தானது. முற்றிலும் அரேபிய ராட்ஜியம் ஒன்றை பிரதிபலிக்கும் இத்திட்டமானது எதிர்காலத்தில் இந்நாட்டிலுள்ள பல்மத கலாச்சாரத்தை முற்றாகவிழுங்கும் நோக்கு கொண்டது.
உலகிலுள்ள முஸ்லிம்களுக்கு சர்வதேச ஷரியா சட்டக்கல்லூரி ஒன்றை இலங்கையில் அமைக்க சவுதி அரேபிய அரச அனுசரணையுள்ள சுல்தான் ஒருவன் ஹிஸ்புல்லா என்ற தனிநபருக்காக நிதியுதவியை மேற்கொள்ளவில்லை. மாறாக இதன் பின்னணியிலுள்ள நோக்கங்கள் இலங்கையின் பல்லின கலாச்சாரத்தை ஒடுக்கி இஸ்லாமிய ஆக்கிரமிப்பு ஒன்றுக்கான முஸ்தீபாகும்.
இப்பல்கலைகழகத்திற்கான இடதேர்வானது அந்த நோக்கங்களை முற்றிலும் நிறைவு செய்வதற்கேற்றவாறாக அமைந்துள்ளது. லட்சக்கணக்கான ஏக்கர் அரச காணிகள் காணப்படும் இவ்விடத்தில் பல்கலைக்கழகத்தினை கட்டியெழுப்பியதன் நோக்கம் பின்னாட்களில், பல்கலைக்கழக மாணவர்கள், விரிவுரையாளர்கள், ஊழியர்களுக்கென அங்கே குடிமனைகளை அமைத்து அப்பிரசேத்தை உலகிலுள்ள பிரமிக்கத்தக்க அரபுக்கலாச்சார நகரமாக்குவதே ஹிஸ்புல்லாவின் நோக்கமாகும். நிலமை இவ்வாறு இருக்கும்போது, ஹிஸ்புல்லாவின் பல்கலைக்கழகத்தை கைப்பற்றுவதற்கு அரசாங்கமெடுத்துள்ள முடிவுக்கு எதிராக நாளை தியேட்டர் மோகன் ஆர்ப்பாட்மொன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் அதற்கு தமிழ் மக்களிடமிருந்து ஆதரவும் கேட்கப்பட்டுள்ளது.
தமிழ் உணர்வாளர்கள் அமைப்பு என்று தமக்கு பெயரிட்டுள்ள குறித்த அமைப்பினரின் உணர்ச்சி நரம்புகள் அனைத்தும் முற்றாக அறுக்கப்பட்டுள்ளது என்றே உணர முடிகின்றது. அவ்வாறு தமிழ் உணர்வு இருக்குமாயின் காளிகோயில் காணியை எனது அதிகாரத்தை பயன்படுத்தி மீன்சந்தை கண்டினேன் என்ற ஹிஸ்புல்லாவின் அரபு மயமாக்கலுக்கு எதிராக பொங்கி எழாமல் இருக்க முடியாது. அவ்வாறு செய்வதற்கு தற்துணிவு இல்லாவிட்டாலும் இன்று அரசின் உதவியினால் அத்திட்டமை சுக்குநூறாகின்றபோது அதற்கு ஆதரவு வழங்குவதை விடுத்து ஹிஸ்புல்லாவிற்காக செயற்படுவது வெட்கித்தலைகுனிய வேண்டிய செயற்பாடாகும்.
எது எவ்வாறாயினும் இப்பகிஷ்கரிப்புக்கான அழைப்பை நிராகரிக்குமாறு மட்டக்களப்பு இளைஞர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
0 comments :
Post a Comment