இருபது இலட்சம் சமுர்த்தி பயனாளிகளுக்கு நிவாரணம் வழங்கப்படவுள்ளது.
சாஹன பியவர சாஹ அருணலு என்ற திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் சமுர்த்தி பயனாளிகள் சுமார் 20 இலட்சம் பேருக்கு நிவாரணம் வழங்கப்பட்டுவருகிறது.
இதற்காக 20,000; மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்ப்பட்டுள்ளதாக சமுர்;த்தி அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் நாயகம் ஆர்.பி.பந்துல திலகசிறி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:
கொவிட் 19 வைரசு தொற்று பரவுவதை தடுக்கும் நோக்கில் அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ள தொடர் வேலைத்தி;டத்திற்கு அமைவாக சமுர்த்தி பயனாளிகளுக்காக ரூபா பத்தாயிரம் முற்பண கொடுப்பனவை வழங்குவதற்கு அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்களினால் சமீபத்தில் ஆலோசனை வழங்கப்பட்டது.
இதே போன்று தற்பொழுது அமைக்கப்பட்டுள்ள அத்தியாவசிய சேவை விநியோக ஜனாதிபதி செயலணி இதில் கவனம் செலுத்தியுள்ளது. அத்தோடு அதற்கமைவாக சுகாதார சுதேசிய வைத்திய, மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக பாதுகாப்பு அமைச்சர் திருமதி பவித்ரா வன்னியாராச்சி அவர்களின் வழிகாட்டலில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் சம்பந்தப்பட்ட பணிகளை தற்பொழுது ஆரம்பித்துள்ளது. இந்த வேலைத்திட்டத்திற்கு 'சாஹன பியவர சாஹ அருணலு' என்று பெயரிடப்பட்டுள்ளதுடன், இதுவரையில் இது நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
சமுர்த்தி பயனாளிகள் சுமார் 20 இலட்சம் பேருக்கு இதன் கீழ் நிவாரணம் வழங்கப்படுவதுடன் இதற்காக 20,000; மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்ப்பட்டுள்ளது.
இதற்கமைய தலா ரூபா ஐயாயிரம் வீதம் 2 கட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு வழங்கப்படுவதுடன், முதல் கட்டத்தின் பத்தாயிரம் மில்லியன் ரூபா பயனாளிகளுக்காக செலவிடப்படுகிறது.
2ஆம் கட்டம் பயனாளி சமூகத்தின் தேவைக்கு அமைவாக ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னர் பூர்த்தி செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிவாரணப் பணத்திற்காக வட்டி அறவிடப்படமாட்டாது.
அது முதல் 6 மாத காலத்திற்காகும். அதன் பின்னர் இந்த பணத்தை திருப்பி செலுத்துவதற்காக 18 மாத காலம் வழங்கப்படும் இதே போன்று இந்த பயனாளிகளின் கணக்குகளில் இதுவரையில் உள்ள வைப்பீட்டுத் தொகைக்கு வழங்கப்படும் வட்டி முன்னர் போன்று வழங்கப்படும்.
விசேடமாக தற்பொழுது சில பிரதேசங்களில் ஊரடங்கு சட்டத்தில் தளர்வு ஏற்படுத்தப்பட்டும் போது. பொதுமக்கள் சமுர்த்தி வங்கிகளுக்கு சென்று சுகாதார பாதுகாப்பு முறைகளுக்கு அப்பால் செயல்படுவதை அவதானிக்க முடிகின்றது.
இந்த நிவாரண பணம் மற்றும் மாதாந்தம் வழங்கப்படும் நிவாரண தொகையை கிராம உத்தியோகத்தர் பிரிவுக்குள் சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகள் மற்றும் சமுக நிதி அபிவிருத்தி அதிகாரிகளை அழைத்துக்கொண்டு பயனாளிகள் சமுர்த்தி வங்கிகளில் ஒன்றுகூடக்கூடாது என்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளத.
தற்பொழுது வழங்கப்பட்டுள்ள சுற்றரிக்கை ஆலோசனைக்கு அமைவாக அனைத்து சமுர்த்தி சமுகத்தினருக்கும் ரூபா பத்தாயிரம் நிவாரண தொகை விடுவிக்கப்படவேண்டும், பயனாளிகளினால் சமுர்;த்தி வங்கிகள் மூலம் பெற்றுக் கொண்டுள்ள கடன்தொகையில் தவணைப்பணத்தை திருப்பி செலுத்துவதற்காக 6 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இதனால் இவ்வாறான கடன் தொகையில் தவணைக் கட்டணத்தை திரும்பி அறவிடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு அனைத்து சமுர்த்தி முகாமையாளருக்கும் அறிவிக்கப்படுகின்றது.
மேலும் பயனாளிகளின் அவசியம் கணக்குகளில் உள்ள எஞ்சிய தொகை போதுமான வகையில் இல்லாத போது கிராமத்தில் உள்ள சமுர்த்தி சமூக நிதி சங்க அங்கத்தவர்களுக்கு இந்த முற்பணத் தொகையை வழங்கும் முறையொன்றை முன்னெடுத்து அனைத்து பயனாளிக்கும் நிவாரணத்தை வழங்க வேண்டும்.
கொவிட் 19 வைரசு நிலமைக்கு மத்தியில் மிகவும் பொறுமையுடன் சமூக இடைவெளி முறையை கடைபிடித்து, சுகாதார பிரிவின் மூலம் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைக்கு அமைய தமது தேவையை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்று அனைத்து சமுர்த்தி பயனாளி சமுகத்தினரிடமும் தயவுடன கேட்டுக் கொள்கின்றோம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment