சுதந்திர வர்த்தக வலயத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கான மார்ச் மாத சம்பளத்தை வழங்குவதற்கு நடவடிக்கை
சுதந்திர வர்த்தக வலயத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கான மார்ச் மாத சம்பளத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனைக்கு அமைவாக இது விடயம் தொடர்பில் அறிவுறுத்தல்களை உரிய தொழிற்சாலை உரிமையாளர்களுக்கு வழங்கியிருப்பாக அமைச்சர் குறிப்பிட்டார்.
இதற்கு இணங்க நாடளாவிய ரீதியில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள 14 சுதந்திர வர்த்தக வலயங்களில் 278 தொழிற்சாலைகளில் பணியாற்றும் ஒரு லட்சத்து 37 ஆயிரம் 478 ஊழியர்களுக்கான சம்பளத் தொகையை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment