உரத்தை முறையாக விநியோகிப்பதற்கு உரச் செயலகம் நடவடிக்கை
கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் உரத்தை முறையாக விநியோகிப்பதற்கு உரச் செயலகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
உரம், உணவு உற்பத்தி மற்றும் உணவு பாதுகாப்பு அத்தியாவசிய விடயம் என்பதினால் உர தயாரிப்பு மற்றும் விவசாயிகளுக்கு பாதுகாப்பாக விநியோகிப்புது கொவிட் 19 தொற்று நிலமையின் கீழ் மேற்கொள்ள வேண்டிய பணியாக அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைவாக, உரத்தை உற்பத்தி செய்யும் நிறுவனம் மற்றும் விநியோகிக்கும் நிறுவனம் இதற்கான பணிகள் அனைத்தையும்
வரையறுக்கப்பட்ட பணியாளர் சபையொன்றை பயன்படுத்தி, ஊழியர்கள் மத்தியில் கொவிட் 19 தொற்று பரவாதிருக்க தேவையான அனைத்து சுகாதார பாதுகாப்பு வசதிகளின் கீழ் பணிகளை முன்னெடுக்க வேண்டும். உர ஏற்றுமதி, சுங்க கன்காணிப்பு மற்றும் வர்த்தக அனுமதியுடன் கோரப்பட்ட சந்தர்ப்பத்தில் மின் அஞ்சல் தபால் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மேலும், உர விநியோகத்திற்காக பிரதேசத்தின் உங்களது நிறுவனத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள பிரதிநிதிகளின் வர்த்தக நிலையங்களில் விவசாயிகளுக்கு உரத்தை கொள்வனவு செய்யக்கூடிய வகையில் திறந்திருப்பதற்கு உங்களால் அறிவிக்கப்பட வேண்டும். இதே போன்று இதனுடன் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ள அறிவிப்பை உர வர்த்தக நிலையங்களில் ஒட்டுவதற்கும் ஆலோசனை வழங்க வேண்டும்.
இதே போன்று உரத்தை ஏற்றிச் செல்வதற்காக முக்கிய வர்த்தக நிலையங்களுக்கு மரக்கறி வகைகளை ஏற்றிச் செல்லும் லொறிகளை பயன்படுத்த முடிவதுடன் உங்களது நிறுவனம் அல்லது பிரதிநிதிகளின் லொறிகளை தவிர ஏனைய லொறிகளை பயன்படுத்துவீர்களாயின், அதற்காக பொருத்தமான அனுமதியை வழங்குவதற்கு தேசிய உர செயலகம் அலுவலகத்தின் மாவட்டத்தின் உதவிப் பணிப்பாளர்களிடம் அதற்காக இதன் மூலம் அனுமதி வழங்கப்படுகின்றது. இந்த கடிதத்துடன் மாவட்ட உதவிப்பணிப்பாளர்களின் தொலைபேசி பட்டியல் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படுள்ளது என்றார்.
0 comments :
Post a Comment