ஊரடங்கு உத்தரவை கடுமையாக நடைமுறைப்படுத்த பொலிஸ் மா அதிபர் உத்தரவு
அரச மருந்தகங்கள் தவிர்ந்த ஏனைய தனியார் மருந்தகங்களை உடனடியாக மூடிவிடுமாறு பொலிஸ் மா அதிபர் சகல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார். இருப்பினும் மருந்தகங்களினால் வீடுகளுக்குச் சென்று மருந்துகளை விநியோகிப்பதற்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய உணவு பொருட்களை வீடுகளுக்கு விநியோகிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள போதும், குறித்த விற்பனை நிலையங்களை திறந்து வைத்து நுகர்வோருக்கு பொருட்களை விற்பனை செய்வதாக கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
வீடுகளிலிருந்து வெளியேறி பொது இடங்களில், பிரதான வீதிகளில், மற்றும் குறுக்கு வீதிகளில் நடமாடுவோருக்கு எதிராக சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறும் பொலிஸ் மா அதிபர் சகல பொலிஸ்; நிலைய அதிகாரிகளையும் அறிவுறுத்தியுள்ளார் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்ப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment