ஊரடங்கு சட்டத்திற்கு அப்பாற்சென்று விரைவாக செயற்படவேண்டும் என்கிறது ஐ.நா.
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதால் மாத்திரம் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது என உலக சுகாதார ஸ்தாபனத்தின் பொதுச் செயலாளர் டெட்ரோஸ் கேப்ரியசஸ் தெரிவித்துன்ளார்.
இலங்கை, இந்தியா உட்பட கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட உலக நாடுகள் பலவும் ஊரடங்கு முறையை நடைமுறைப்படுத்தியுள்ளன.
இது குறித்து டெட்ரோஸ் கேப்ரியசஸ் கூறுகையில்,
‘பல உலக நாடுகள் ஊரடங்கு முறையைப் பின்பற்றி வருகின்றன. இதனால் கொரோனா பரவல் வேகம் சற்று குறையலாம். ஆனால், கொரோனா எனும் பெருந்தொற்று நோய் பரவலை ஊரடங்கு மட்டுமே எதிர்கொண்டுவிட முடியாது. கொரோனா வைரஸைக் கண்டுபிடித்து அழிக்க வேண்டும். கொரோனாவை அழிக்க அடுத்த வழியைக் கண்டுபிடிக்க வேண்டும். கொரோனாவை அழிக்க அடுத்த வழி என்ன என்பதைக் கண்டறிய வேண்டும். கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களை தனிமைப்படுத்ததீவிரம் செலுத்த வேண்டும். இதனை வேகப்படுத்த வேண்டும்.’ என அவர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment