கொரோணாவினால் இறந்தவருக்கு மரண பரிசோதனை இல்லை. சடலத்தை அரச செலவில் அடக்கம் செய்ய தீர்மானம்.
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்த முதலாவது இலங்கையரின் சடலத்தை பிரேத பரிசோதனை மேற்கொள்ளாது புதைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, உயிரிழந்த இலங்கையரின் பூதவுடலை ஐ.டி.எச் வைத்தியசாலையின் அறையிலிருந்து வெளியில் கொண்டு வரும் சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
இந்த சடலம் மீதான பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ளப்படாது, அரசாங்கத்தின் செலவில் புதைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment