ஒவ்வொருவரும் நாளாந்தம் தமது உடல் வெப்பத்தை பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொருவரும் நாளாந்தம் 2 முறை தமது உடல் வெப்பத்தை பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று சமூக விசேட வைத்தியர் திருமதி பிரியங்கா ரணசிங்க தெரிவித்துள்ளார்.
காய்ச்சல், இருமல், தடிமல், தொண்டை வலி ஆகியன காணப்படுமாயின் உடனடியாக பிரதேச பொது மக்கள் சுகாதா பரிசோதகரை சந்தித்து அரசாங்க வைத்தியசாலைக்கு செல்லவேண்டும்.
இதற்காக பொது போக்குவரத்து சேவையை பயன்படுத்துவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். 1990 என்ற சுவசெரிய இலவச அம்புலன்ஸ் சேவையை வீட்டுக்கு வரவழைத்துக்கொள்ள முடியும். இந்த அம்புலன்ஸ் சேவை 24 மணித்தியாலமும் தயார் நிலையில் உள்ளது.
கொரோனா வைரஸ் பரவிய நாடுகளுக்கு அமைவாக முதல் வாரத்திலும் பார்க்க அது பரவியமை இரண்டாவது வாரத்தில் அதிகரிக்கப்பட்டமை அவதானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைவரும் அவதானத்துடன் செயல்படவேண்டும். எப்பொழுதும் தேக ஆரோக்கியம் அற்றவர்களையே பாதிக்கும்.
நோயாளி என சந்தேகிக்கப்படும் போது அவர்களில் இருந்து நாம் தொடர்புபட்டார் விலகியிருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
அரசாங்க மற்றும் தனியார் துறை பிரிவினருக்கு 3 நாள் விடுமுறை வழங்கப்பட்டமை சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு அல்ல என்று தெரிவித்த அவர் பொது மக்கள் உள்ள இடங்களில் இருந்து வெளியேறி ஒன்றுகூடலை குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும்.
0 comments :
Post a Comment