Saturday, March 21, 2020

மட்டக்களப்புக்கு ஒரு லண்டன் தமிழனும், யாழ்பாணத்திற்கொரு சுவிஸ் தமிழனும் கொரோணா காவிகளாகினர்!

யாழ்பாணம் பிலதெப்பியா தேவாலயத்தில் இடம்பெற்ற ஆராதனையில் கலந்துகொண்டிருந்தோருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்ககூடுமென்று வட மாகாண சுகாதார திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக மாகாண சுகாதார பணிப்பாளர் மக்களிடம் அவசர வேண்டுதல் ஒன்றை விடுத்துள்ளார்.

அவ்வேண்டுதலில் சுவிட்சர்லாந்து நாட்டிலிருந்துவந்த சிவராஜா போல் சற்குணராஜா என்ற மகபோதகர் கொரோணா தொற்றுக்கு ஆளாகியிருந்த நிலையில் போதனைகளை நடாத்தியுள்ளதாகவும், அதன் பிரகாரம் அப்பிரார்த்தனையில் கலந்துகொண்டோர் தொற்றுக்கு ஆளாகியிருப்பது ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் இப்போதனைகளில் கலந்துகொண்டோர் தங்களை உடனடி நடவடிக்கைக்கு உட்படுத்துமாறும் தெரிவித்துள்ளார்.


அத்துடன் குறித்த போதகரால் மேற்கொள்ளப்பட்ட போதனைகளில் கலந்துகொண்டோர் மற்றும் அவருடன் பழகியோர் உடனடியாக 0212217278 இலக்கத்திற்கு அழைத்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் குறித்த போதரினால் தொற்றுக்குள்ளாகியிருக்கக்கூடியவர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் அவர் தங்கியிருந்த , அவர் விஜயம் செய்த வீடுகள் , வைத்தியசாலை , கடைத்தொகுதிகள் , சந்தைத்தொகுதிகள் , சாரதி , சட்டத்தரணி காரியாலயம் என்பவற்றை அடையாளம் கண்டுள்ள யாழ் சுகாதார திணைக்களம் அந்நபர்களை தங்களது வீடுகளில் தனிமைப்படுத்தியுள்ளதுடன் அவர்களது தொடர்புகளை தவிர்குமாறு மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

அவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் தொடர்பான விபரம் கீழே தரப்பட்டுள்ளது.





இதேநேரம் மட்டக்களப்பில் கொரோணா பரவுவதற்கு லண்டன் தமிழர் ஒருவர் காரணமாக இருந்தார் என்பதும் அவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளரான உதயகுமார் என்பவருக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள வந்திருந்தார் என்பதும் இங்கு சுட்டிக்காட்டப்படவேண்டியதாகும்.



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com