இறைச்சிக்கடைகளை மூடுவீர்! அரசாங்கத்தை கோருகின்றார் சிவசேனை மறவன்புலவு சச்சிதானந்தன்.
தீநுண்மிக் (வைரசு) கொள்ளை நோயில் இருந்து மக்களைக் காக்க இறைச்சிக் கடைகள் அனைத்தையும் உடனடியாக மூடுமாறு சிவசேனை இயக்கத்தின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன் அரசாங்கத்தை கோரியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்:
கோவிட்டு 19 என்ற தீநுண்மி (வைரசு) கொள்ளை நோயைப் பரப்புகிறது.
இத் தீநுண்மியின் தொடக்க இடம் சீனாவின் ஊகான் மாகாணத்தில் ஓர் இறைச்சிக்கடை எனச் சீன அரசு அறிவித்தது.
இறைச்சி உணவைத் தவிருங்கள் எனச் சீன அரசுத் தலைவர் சீன மக்களைக் கேட்டிருந்தார்.
கோவிட்டு தீநுண்மியின் கொள்ளை நோய்த் தாக்கத்தைக் குறைக்க இந்தியாவின் கேரளா உள்ளிட்ட பல மாநிலங்கள் கோழி ஆடு மாடு இறைச்சிக் கடைகளை மூடுமாறு ஆணை இட்டுள.
இலங்கையிலும் வேகமாகப் பரவிவரும் கோவிட்டு தீ நுண்மியின் கொள்ளை நோய்த் தாக்கத்தைக் குறைக்க இலங்கை முழுவதும் இறைச்சிக் கடைகளை உடனடியாக மூடுமாறு ஆணையிட இலங்கை அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
ஒன்பது மாகாணங்களிலும் உள்ள உள்ளூராட்சித் திணைக்கள ஆணையர் ஒன்பதின்மரும் உடனடியாக ஆணை இட்டு உள்ளூராட்சி அமைப்புகள் உரிமம் வழங்கிய இறைச்சிக் கடைகளை மூடுக எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
0 comments :
Post a Comment