இலங்கையில் கொரோனாவால் இரண்டாவது மரணம் பதிவாகியுள்ளது
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் கொழும்பு IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
நீர்க்கொழும்பு போருதொட பிரதேசத்தை சேர்ந்த 64 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இருதய நோய் என்று கூறி நீர்க்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த நபரை வைத்தியர்கள் பரிசோதனைக்கு உட்படுத்திய போது அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கிருந்து IDH க்கு மாற்றப்பட்டு சிகிசைப் பெற்று வந்த நிலையில் அவர் சற்று முன் இறந்துள்ளார்.
இலங்கையில் இதுவரை 122 பேர் கொரோனா நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.அவர்களில் 14 பேர் இதுவரை பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக ஏனைய 106 பேரும் தொடர்ந்து சிகிசை பெற்று வருகின்றனர்.
0 comments :
Post a Comment