வடமாகாணம் மற்றும் புத்தளம் மாவட்டத்திற்கு பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் நீடிப்பு
கொரோனா வைரஸ் பரவலை கருத்திற் கொண்டு மிகவும் இடர் பிரதேசங்களாக அடையாளம் காணப்பட்டுள்ள கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும்.
புத்தளம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் நாளை, மார்ச் 27 வெள்ளிக் கிழமை காலை 6.00 மணிக்கு தளர்த்தப்பட்டு அன்றைய தினம் பிற்பகல் 2.00 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும்.
இம்மாவட்டங்களில் மீண்டும் அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் மார்ச் 30 திங்கள் 6.00 மணிக்கு நீக்கப்பட்டு அன்றைய தினம் பிற்பகல் 2.00 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும்.
ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப் பகுதியில் மக்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் மற்றும் ஏனைய பொருட்களை வீடுகளில் இருந்தே கொள்வனவு செய்யக்கூடிய வகையில் தொடர்ச்சியாக வழங்களை மேற்கொள்ள அரசாங்கம் சகல ஏற்பாடுகளையும் செய்துள்ளது.
நாடு முழுவதிலும் ஊரடங்கு சட்டம் பற்றிய இந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள நேரங்கள் மீண்டும் அறிவிக்கப்படும் வரை நடைமுறையில் இருக்கும்.
0 comments :
Post a Comment