Sunday, March 1, 2020

இன்று நள்ளிரவுடன் தற்போதைய பாராளுமன்றின் காலம் நிறைவுபெறுகிறது...

பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நாட்கள் பற்றிச் சொல்கிறார் தேர்தல்கள் ஆணையாளர்


நாட்டின் தற்போதைய நிலை தொடர்பில் பலதரப்பினரிடத்தும் பல்வேறு கருத்துக்கள் வௌிவந்த வண்ணமே உள்ளன. முஸ்லிம்கள் தொடர்பிலான பல்வேறு தடைவிதிப்புக்கள்... அடுத்து இடம்பெறவுள்ள பொதுத்தேர்தலுக்கான பூச்சாண்டியே என்பது பெரும்பாலானோரின் கருத்தாக உள்ளது. எல்லாப் பிரச்சினைகளுக்கான கட்டவிழ்ப்புக்களும் பொதுத்தேர்தலில் 2/3 பெரும்பான்மையைச் சிங்களவர்களிடமிருந்து பெற்றுக்கொள்வதற்கே என்பது பெரும்பாலானோரின் கருத்தாகவுள்ளது.

இந்நிலைமை இப்படியிருக்க, எதிர்வரும் பொதுத்தேர்தல் தொடர்பில் திகதி குறித்துள்ளார் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர் ஏப்ரல் மாதம் 25, 27, 28, 29 ஆம் திகதிகளில் மே மாதம் 04 ஆம் திகதி பொதுத்தேர்தல் பெரும்பாலும் நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார். 19 ஆவது அரசியல் யாப்பின்படி, இன்று நள்ளிரவுடன் பாராளுமன்றத்திற்கான நான்கரை ஆண்டுகள் நிறைவுபெறுகின்றன. பாராமன்றைக் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கே உள்ளது.

பெரும்பாலும் நாளை நள்ளிரவுடன் பாராளுமன்றம் கலைக்கப்படலாம் எனவும் தெரியவருவதாகவும் தேர்தல்கள் ஆணையகத்தின் ஆணயைாளர் குறிப்பிட்டார்.

நேற்று அம்பலாங்கொடையில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment