72 ஆக அதிகரித்தது கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் இருவர் இனம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்
அதன்படி இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு 72 பேர் இலக்காகி உள்ள நிலையில் அவர்கள் நாட்டின் பல்வேறு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை நேற்று மாலை 6 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 6 மணிவரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த காலப்பகுதியில் அனைவரும் தத்தமது வீடுகளில் தங்கி சுய தனிமைப்படுத்தலை மேற்கொள்ளுமாறு பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
அத்தோடு ஊரடங்கு சட்டம் அமுல் ஆக்கப்பட்டுள்ள காலத்தினுள் பிரதேசத்தின் ஊடாக பயணிக்கும் அத்தியாவசிய சேவை மற்றும் ஊடக சேவைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதோடு அவர்கள் தமது நிறுவனத்தின் ஊடாக வழங்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அடையாள அட்டையை ஊரடங்கு சட்ட அனுமதி பத்திரமாக பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு பயணிக்கும் பயணிகளுக்கு விமான பயணச்சீட்டினை ஊரடங்கு சட்ட அனுமதி பத்திரமாக உபயோகிக்க முடியும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment