Sunday, March 22, 2020

கொரோனா ஒழிப்புக்காக 70 மில்லியன் நிதியுதவி வழங்கியுள்ளார் தனவந்தர் தம்மிக்க பெரேரா!

கொரோனா வைரசுத் தாக்கத்தினை கட்டுப்படுத்துவதற்கான அவசர மருத்துவ சேவைகளுக்காக தனது தனிப்பட்ட நிதியிலிருந்து 70 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளார் LB Finance Ltd இனது தொழிலதிபர் தம்மிக்க பெரேரா அறிவித்துள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு ஆறு செயற்கை சுவாசக்கருவிகள் (ICU ventilators), அவசரசிகிச்சைப் பிரிவுக்கான குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான 169 படுக்கைகள் உட்பட 485 மருத்துவ படுக்கைகள் தம்மிக்க பெரேராவினால் வழங்கப்பட்டுள்ளன.

கொரோனா வைரசு பரவலுக்கு எதிராக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ முன்னெடுத்துள்ள செயற்றிட்டங்களுக்குத் தனது முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ள அவர், மேற்படி உதவித்தொகையானது முதற்கட்டமானது என்றும் அடுத்துவரும் காலப்பகுதியில் தேவைகளுக்கு ஏற்றவகையில் மேலதிக உதவிகளை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com