கொரோனா வைரஸ் தகவல்களை மறைத்தால் 6 மாதம் சிறைத்தண்டனை
கொரோனா வைரஸ் தொற்று கொண்ட அல்லது அந்த விடயம் தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ள ஒரு நபர் தனது நோய் தொடர்பான தகவல்களை மறைப்பது தண்டனைக்குரிய குற்றமாகும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறானோர் குற்றவாளிகள் என அடையாளம் காணப்பட்டால் ஆறு மாத கால சிறைத்தண்டனை வழங்கப்படும். இவர்கள் எதுவித பிடிவிறாந்தும் இல்லாமல் நேரடியாக கைது செய்யப்படுவர்கள் என்று பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
சமூக வலைத்தளங்களில் உண்மைக்குப் புறம்பான தகவல்களை மேற்கொள்வோருக்கும் உடன் தண்டனை வழங்கப்படும். தவறான தகவல்களை பரப்புகின்ற 23 நபர்கள் தொடர்பான விசாரணைகளை நாம் ஆரம்பித்துள்ளோம். அவர்களை உடனடியாக கைது செய்யாது விட்டாலும், அவர்கள் மீதான விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவின் இணைய குற்றப்பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் தொடர்பான தொழில்நுட்ப ரீதியான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சாட்சியங்கள் உறுதிப்படுத்தபின்னர் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.
0 comments :
Post a Comment