Thursday, March 26, 2020

வைரசு தாக்குதலுக்கு உள்ளான 500 பேர் தலைமறைவு!

கொரோனா வைரசு தாக்குதலுக்குள்ளான நோயாளிகளின் எண்ணிக்கை 101 என அரசாங்கப் புள்ளிவிபரங்கள் மூலம் அறியவந்தாலும்கூட, அந்த வைரசுத் தாக்குதலுக்குள்ளானவர்கள் என சந்தேகிக்கப்படும் 500 பேர் சமூகத்தில் உலாவருகின்றனர் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமன்த ஆனந்த சிங்களப் பத்திரிகையொன்றுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போது தெரிவித்தார்.

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் வேளைகளில் தனிமைப்படுத்தல் சரிவர கடைப்பிடிக்கப்படாததனால் பெரும்பாலானோருக்கு இந்த வைரசு தொற்றியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாகவும், எதிர்வரும் 14 நாட்களுக்குள் அதாவது ஏப்ரல் 08 ஆம் திகதி ஆகும்போது நாட்டில் நோயாளிகள் தொகை வெகுவாக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

நோயாளிகளுடன் நெருங்கிப் பழகி, அவர்களுடன் தொடுகை மூலம் தொடர்புகொண்ட 19000 இற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பிரிவினர், நிருவாகப் பிரிவுகள், சுயதனிமைப்படுத்தல் மையங்களில் நாடளாவிய ரீதியில் பரந்து காணப்படுவதாகவும் வைத்தியர் சமன்த ஆனந்த தெரிவித்தார்.

எதுஎவ்வாறாயினும் நாட்டிலுள்ள அனைத்து மக்களின் அதிகாரிகள் சொல்லும் உபதேசங்களைக் கருத்திற்கெண்டு செயற்பட்டால் எதிர்வரும் இருவாரங்களில் நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சிகரமான சூழலில் வாழலாம் என்று மேலும் அவர் தெளிவுறுத்தினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com