Thursday, March 19, 2020

கொரோனா தொற்று ஒழிப்பிற்கு 500 மில்லியன் ஒதுக்கீடு : அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவிப்பு!

கொரோனா வைரஸ் தொற்று ஒழிப்பிற்காக 500 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கிடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலைக் குறைப்பதற்கான முதலீடுகளை வழங்க ஜனாதிபதி எடுத்துள்ள தீர்மானத்திற்கு அமைய அமைச்சரவை இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.

ஒன்றிணைந்த நிதியத்திடம் காணப்படும் நிதியை செலவிடுவதற்கான அதிகாரம் திரைசேரியின் செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ளதாக இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போது, அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஒளடத பற்றுச்சீட்டுக்கான மிகுதியை செலுத்துவதற்காக 102 பில்லியன் ரூபாவை வழங்குவதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

உரக் கொள்வனவின் மிகுதியை செலுத்துவதற்கு 3 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

சிறு மற்றும் மத்திய தர நிர்மானப் பணிகளுக்கான பற்றுச்சீட்டு மிகுதியை செலுத்த 5 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றினால் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ள சுற்றுலா, ஆடை கைத்தொழில், வர்த்தகம் உள்ளிட்ட துறைகளுக்கான கடனை மீள செலுத்த 6 மாதங்கள் சலுகை காலம் வழங்கவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

மேலும் பணி முதலீட்டுக்கு 4 வீத வட்டியின் கீழ் கடனை வழங்கவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதேவேளை பொதுத் தேர்தலின் செலவுகளுக்காக 8 பில்லியன் ரூபா நிதியை ஒதுக்கிடுவதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com