Friday, March 20, 2020

மொட்டும் தலைமைக் காரியாலயத்தை அடித்து மூடியது!

தற்போது வெகுவிரைவாகப் பரவிவருகின்ற ஆட்கொல்லி கொரோனா காரணமாக ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைமையகத்தை இன்று (20) ஆம் திகதி முதல் மறு அறிவித்தல் வரை மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸைத் தடுக்கும் அரசின் நடவடிக்கைக்கு உடந்தையாகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அம்முன்னணியின் செயலாளர் நாயகம் வழக்கறிஞர் ஸாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

இந்தக் காலப்பகுதியில் தலைமையகத்தின் ஊடகப்பிரிவு தவிர்ந்த அனைத்துப் பிரிவுகளும் மூடப்படவுள்ளதாகவும் தெரியவருகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com