யாழில் தேவ ஆராதனையில் கலந்துகொண்டோர் 150 பேர் தொடர்பில் Corona பற்றிய சந்தேகம்! சார்ள்சுக்கு சீசீரிவி பதிவுகள் வேண்டுமாம்!
சென்ற 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்திருந்த சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த கிறிஸ்தவ பாரிஸ்டர் ஒருவர் தொடர்பலும் அவரது ஆராதனையில் கலந்துகொண்ட 150 பேர் தொடர்பிலும் COVID-19 வைரசு தொற்று ஏற்பட்டிருக்கக் கூடும் என வடக்கு மாகாண ஆளுநர் திருமதி சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.
குறித்த பாரிஸ்டர் தற்போது வைரசு தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளார் எனக் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அவரது தேவ ஆராதனை இடம்பெறுவதற்கு முன்னர் அவருடன் சேர்ந்திருந்த மூவரும் அந்த வைரசு தாக்கத்திற்குள்ளாகியிருக்கக் கூடும் என நம்பப்படுகின்றது.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வட மாகாண ஆளுநர் குறித்த தேவாலயத்தில் இடம்பெற்ற ஆராதனை தொடர்பிலான ஸீஸீரீவியின் காட்சிகளை வெகுவிரைவில் தமக்கு வழங்குமாறும் அதில் கலந்துகொண்டோர் பற்றி தகவல்களை உடனடியாக தனக்கு வழங்குமாறும் கேட்டுள்ளார். பொலிஸார் குறித்த தேவலாயத்திற்குச் சென்று அதில் கலந்துகொண்டோர் அனைவரையும் வரவழைக்குமாறும், அவர்களைத் தனிமைப்படுத்த வேண்டிய தேவையுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
அன்றைய தினம் குறித்த பாரிஸ்டர் தேவாலயத்திற்கு வருகை தந்தவர்களைக் கட்டியணைத்து அவர்களுடன் உறவாடியதாகவும், அவர் தான் நோய் வாய்ப்பட்டிருப்பதாகக் கூறியதாகவும் தெரியவருகின்றது.
எதுஎவ்வாறாயினும் யாழில் இந்தச் செய்தி வௌியானதும் பெரும்பாலானோர் மனஉளைச்சலுக்குள்ளாகி இருப்பதாகவும், யாழில் சரியான முறையில் வைத்தியசாலைகளில் பணியாட்கள் இல்லாதிருப்பதனால் பாரிய பிரச்சினை எழுந்துள்ளதாகவும், குறித்த நோயிலிருந்து நிவாரணம் பெறுவதற்காக முற்று முழுதாக முயற்சி செய்யப்பட்டு வருவதாகவும் ஆளுநர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment