எதிர்வரும் 15 நாட்களும் இலங்கைக்கு சவால் மிகுந்த காலப்பகுதியே!
இலங்கையின் கொரோனா தொற்று நோயாளிகளை உலகளாவிய ரீதியில் ஒப்பிட்டுப் பார்க்கும்போது அடுத்துவரும் 15 நாட்களும் இலங்கைக்கு சவால் மிகுந்த காலப்பகுதியாக உள்ளது. முதல் 15 நாட்களிலும் ஜேர்மன், ஸ்பெய்ன், அமெரிக்கா போன்ற நாடுகளில் இலங்கையை விடவும் குறைவாகவே கொரானோ தொற்றுக்கு மக்கள் ஆளாகினர் என இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த தகவலுக்கேற்ப ஒப்பிட்டுப் பார்க்கும்போது, முதல் பதினைந்து நாட்களிலும் இலங்கையில் 100 பேர் இனங்காணப்பட்டபோது ஜேர்மனியில் 130 பேரும், ஸ்பெய்னில் 84 பேரும், அமெரிக்காவில் 75 பேரும் இனங்காணப்பட்டதாக அறியவருகின்றது என இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித்த அழுத்கே தெரிவித்தார்.
என்றாலும் எதிர்வரும் 15, 25 நாட்களாகும்போது அந்நாடுகளின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருக்கும் எனவும், அதனால் எதிர்வரும் 15 நாட்களும் இலங்கையர் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment