Friday, March 20, 2020

இலங்கை முழுவதும் இன்று மாலை 06.00 மணி முதல் திங்கட்கிழமை காலை 06.00 மணி வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலில்!

இன்று மாலை 6 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 6 மணி வரை இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, புத்தளத்தின் 11 பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளிலும் சிலாபத்தின் 7 பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களிலும் நீர்கொழும்பின் கொச்சிக்கடை பொலிஸ் பிரிவிலும் மீண்டும் நேற்றையதினம் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது.

இதன் பிரகாரம் புத்தளம் பிராந்தியத்தில் ஆனமடுவ கற்பிட்டிஇ கருவலகஸ்வௌ முந்தல் நவகத்தேகம பல்லம வண்ணாத்திவில்லு உடப்பு நுரைச்சோலை மற்றும் சாலியவௌ பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது.

சிலாபம் பொலிஸ் பிரிவின் சிலாபம் தங்கொடுவ கொஸ்வத்த மாதம்பை மாரவில வென்னப்புவ மற்றும் ஆராச்சிக்கட்டு ஆகிய பகுதிகளில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது.

இதனைத் தவிர நீர்கொழும்பு – கொச்சிக்கடை பொலிஸ் பிரிவுகளிலும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது.

பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் வீடுகளிலிருந்து வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரொனா தொற்றை இல்லாதொழிக்கும் செயற்பாட்டிற்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, ஜா-எல மற்றும் வத்தளை பொலிஸ் பிரிவு பகுதிகளில் நேற்றுஇரவு 10 மணி முதல் அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தற்போது தளர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com