இலங்கையுடனான உறவை வலுப்படுத்த விரும்புகின்றோம் அமெரிக்க. அமெரிக்கா தலையிட்டு தீர்வை பெற்றுத்தரும் TNA
இலங்கையின் 72ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அமெரிக்கா இலங்கைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.இந்த வாழ்த்துச்செய்தியில் தாம் இலங்கையுடனான உறவை வலுப்படுத்த விரும்புவதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்கல் பொம்பியோ தெரிவித்துள்ளார்
அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்கல் பொம்பியோ (Michael R. Pompeo) விடுத்துள்ள இந்த வாழ்த்துச் செய்தியில், மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது இலங்கையுடனான உறவை மேலும் வலுப்படுத்துவதே தமது எதிர்பார்ப்பு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்..
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு ஜனநாயகத்தை மதிக்கும் பண்பை கொண்டிருப்பதாகவும், இலங்கையின் இறையாண்மைக்கு அமெரிக்கா தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சமாதானம், வர்த்தக அபிவிருத்தி, பாதுகாப்பு, ஜனநாயகம் மற்றும் பொதுமக்களின் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கும் எனவும் மைக் பொம்பியோ குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இலங்கை அரசு தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வினை வழங்காது விட்டால் அமெரிக்க தலைமையிலான மேற்குலநாடுகள் தலையிட்டு தமிழ் மக்களுக்கு தீர்வினை பெற்றுத் தருவார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தெரிவித்துள்ளது
0 comments :
Post a Comment