Monday, February 17, 2020

MCC ஒப்பந்த நாடகம் மீண்டும் மேடையில்...

இலங்கையின் வளங்களை சுரண்டுவதற்கும் இந்நாட்டினை அமெரிக்க அடிமையாக மாற்றுதற்குமாக மேற்கொள்ளவுள்ள ஒப்பந்தங்களில் ஒன்றான மிலேனியம் சலேன்;ஜ் கோப்பரேசன் எனப்படும் ஒப்பந்தத்தில் இலங்கை கைச்சாத்திட முடியுமா என்பதை ஆராய்வதற்கு நிபுணர் குழுவொன்று கோத்தபாய ராஜபக்சவால் நியமிக்கப்பட்டிருந்து.

இக்குழுவானது தனது முதற்கட்ட அறிக்கையை ஜனாதிபதியிடம் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இன்று (17) ஒப்படைத்துள்ளது:

ஐக்கிய தேசியக் கட்சியானது அமெரிக்காவுடன் மேற்கொள்ளவுள்ள மேற்படி ஒப்பந்தமானது அடிமை ஒப்பந்தமாகும் என்றும் இவ்ஒப்பந்தம் கைச்சாத்திட்டப்பட்டால், இலங்கையின் வளங்கள் யாவும் சூறையாடப்படுவதுடன் இலங்கை என்ற ஒரு நாடே இல்லாமல்போகும் என கடந்த தேர்தல் காலங்களின்போது சிங்கள மக்களை மடையர்களாக்கி வாக்குகளை பெற்றுக்கொண்ட தற்போதைய அரசாங்கம் , குறித்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு தயாராகி வருகின்றது.

இதன்பொருட்டு டம்மி நிபுணர் குழுவொன்றை அமைத்து அந்த குழுவின் பரிந்துரையின் பெயரில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென்று அரசு கூறுகின்றது. ஆனால் இது மக்களை ஏமாற்ற மேற்கொள்ளும் ஒரு முயற்சியாகும். அக்குழு எவ்வாறான சிபார்சினை செய்யப்போகின்றது என்பது யாவரும் அறிந்த விடயம்.

குறித்த குழுவானது எதிர்வரும் பொதுத்தேர்தலின் பின்னர், எம்சிசி ஒப்பந்தத்தால் நாட்டுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்றும் அவ்வொப்பந்தத்தில் கையொப்பமிட சிபார்சு செய்வதாகவும் தெரிவிக்கும். அதனை தொடர்ந்து அமெரிக்காவுடனான அடிமைசாசனத்தில் இலங்கை கையொப்பமிடுமென்றும் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த டிசம்பர் மாதம் எம்.சி.சி ஒப்பந்தத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கும் அது தொடர்பில் ஆராய்வதற்காக நான்கு பேர் கொண்ட குழுவொன்றை நியமிப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.

அதனடிப்படையில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் விஞ்ஞானம் பிரிவின் கலாநிதி லலித் குணருவன் தலைமையில் குறித்த குழு நியமிக்கப்பட்டிருந்தது.

குறித்த குழு உறுப்பினர்களாக வாஸ்து விஞ்ஞான நிபுணர் நாலக்க ஜயவீர, போக்குவரத்து அமைச்சின் முன்னாள் செயலாளர் டி.எஸ் ஜயவீர மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி நிஹால் ஜயவர்தன ஆகியோர் நியமிக்கப்பட்டிருந்தனர்.


No comments:

Post a Comment