அனைத்து இனத்தவர்களும் ஒரே நாட்டின் கீழ் ஒற்றுமையாக வாழ்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் - ஜனாதிபதி
2019 ஜனாதிபதி தேர்தலில் நீங்கள் என்னிடம் சவால்மிக்க பாரிய பொறுப்பொன்றை ஒப்படைக்கின்றீர்கள். முதலாவதாக பயங்கரமான தீவிரவாதத்திற்கு முகங்கொடுத்துள்ள எமது தாய்நாட்டை, அதில் ,ருந்து மீட்டெடுப்பதுடன், எந்தவித அடிப்படைவாதத்திற்கும் தலைதூக்க இடமளிக்காத வகையில் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.
அதில் சிங்கள, தமிழ், முஸ்லிம் என்ற அனைத்து இனத்தவர்களும் ஒரே நாடு, ஒரே சட்டத்தின் கீழ் ஒற்றுமையாக, கௌரவமான பங்காளர்களாக வாழ்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும். அவ்வாறே சட்டவாட்சியை அதன் உண்மையான அர்த்தத்துடன் செயற்படுத்த நாம் வழிவகைகளை மேற்கொள்ள வேண்டும்.
அனைத்து பிரஜைகளும் சட்டத்தின் முன் சமமாக மதிக்கப்பட வேண்டும். ஏனைய அனைத்து விடயங்களையும் விட நீங்கள் என்னிடம் எதிர்பார்ப்பது இதனைத்தான் என்பதை நான் நன்கு புரிந்துகொண்டுள்ளேன். தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்திய பின் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதென்பது கடினமான சவாலல்ல.
இரண்டாவதாக எமது அழகிய நாட்டில் வாழ்கின்ற அனைத்து இளைஞர் யுவதிகளும் கௌரவமாக வாழக்கூடிய, உறுதிமிக்க சுபீட்சமான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும். அனைவருக்கும் தமது திறமையின் மூலம், ,யன்றளவு பயனை பெற்றுக்கொள்ளக்கூடிய தொழிலொன்று காணப்பட வேண்டும். திருப்தியான பிரஜை, மகிழ்ச்சியாக வாழக்கூடிய குடும்பம், மற்றும் சிறந்த பண்பாடுடைய சமூகத்தை உருவாக்குவதே எமது கடமையாகும்.
உலகெங்கும் இடம்பெறும் ,யற்கை அனர்த்தங்களின் விளைவாக ஒரே நேரத்தில் வரட்சி மற்றும் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்படும் மக்களாக நாம் ,ருக்கின்றோம்.
எமது இந்த அழகிய திருநாட்டை மீண்டும் ஒரு பசுமையான அழகிய தோற்றத்துடன், எதிர்கால உலகின் சிறப்பான அபிவிருத்தியின் முன்னுதாரணமாகத் திகழவைக்கும் பொறுப்பும் எம்முடையதாகும். ,ந்நாட்டில் அமைதி என்ற கனவு மீண்டும் நனவாகாது என்று எண்ணியிருந்த யுகத்தில், நாம் சமாதானத்தின் மூலம் அந்தக் கனவை நனவாக்கினோம். அது மட்டுமல்லாது, மீண்டும் அழகிய ஒரு இலங்கை நாட்டை இப்பூமியில் உருவாக்கி உங்களிடம் கையளிப்போம்.
எமது இந்த நாட்டில் ஒரே ஒரு குறை தான் காணப்படுகின்றது. எமது நாட்டின் எதிர்கால முன்னேற்றதிற்காக மிகச்சரியான நோக்குடன் செயற்படும், தைரியமான தலைமைத்துவம் ஒன்று இல்லாமையாகும். நாட்டின் முன் காணப்படும் சவால்களை வெற்றிகொள்ளும் பாரிய பொறுப்பை எனக்கு கையளித்ததையிட்டு நான் உங்களுக்கு எனது நன்றியை தெரிவிக்கின்றேன்.
உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்காக புகழ்மிக்க அரச தலைவரான மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் வழிகாட்டல் மற்றும் அவரது நெருங்கிய ஒத்துழைப்பை பெற்றுள்ளமை நாம் அடைந்த நிகரற்ற அதிஷ்டமாகும். உங்கள் கனவுகளை நனவாக்க நான் இயன்றளவு தியாகத்துடன் செயற்படுவேன். நீங்கள் அனைவரும் வேண்டுகின்ற சௌபாக்கியமான இலங்கையை உருவாக்க எம்மால் முடியும் என்பதை நான் மிக உறுதியாக நம்புகின்றேன்.
அதற்காக உங்கள் அனைவரினதும் மக்கள் ஆணை, பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பை நான் எதிர்பார்க்கின்றேன். எனவே 'நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்குடன்' கைகோர்க்குமாறு வேண்டிக்கொள்கின்றேன்.
0 comments :
Post a Comment