Sunday, February 9, 2020

முல்லைத்தீவு வெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புடையோர் எனக்கருதப்படுகின்ற இருவர் கைது! (Photos)

நேற்று (08) முல்லைத் தீவில் இடம்பெற்ற சிறியளவிலான வெடிப்புச் சம்பவத்தில் காயமான நபர் ஒருவர் முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் துப்பாக்கி ரவை ஒன்றை வெட்டிக்கொண்டிருக்கும்போதே இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சந்தேகநபர் பழைய இரும்புகளைச் சேகரிக்கும் நபர் ஆவர். அவர் இரும்பு சேகரிப்பதாகக் கூறி பொதுமக்களிடமிருந்து பழைய இரும்புகளை வாங்கும்போது, அவற்றில் பற்றியெரியாத ரவைகள் இருந்தால் அவற்றை வெட்டி, அவற்றிலிருந்து வெடிமருந்துகளை வேறாகப் பிரித்து களஞ்சியப்படுத்தியுள்ளார்.

மேலும் குறித்த நபர் யுத்த காலப்பிரிவில் எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாத அமைப்புடன் இணைந்து செயலாற்றி வந்துள்ளார் என உறுதியாகியுள்ளது.

மேற்படி வெடிப்புச் சம்பவம் தொடர்பில் 61 வயது பெண்ணொருத்தியும் அவரது 37 வயது சகோதரனும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com