Tuesday, February 4, 2020

சுயலாப அரசியலுக்காக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை இரு கூறுகளாக பிரித்தனர் கஜேந்திரகுமாரும், சிறிதரனும்

தங்களின் மிக மோசமான சுயலாப அரசியலுக்காக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை இரண்டாக பிரித்து ஒரே இடத்தில் இரண்டு போராட்டங்களை நடாத்தியிருக்கின்றார்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், பாராளுமன்ற சிறிதரனும். இச்சம்பவம் இன்று கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இடம்பெற்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

இலங்கையின் 72 ஆவது சுதந்திரதினத்தில் கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கிளிநொச்சியில் இரண்டாக பிரிந்து இரண்டு போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.

இன்று காலை பத்து மணிக்கு கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இரு அணிகளாக பிரிந்து அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி மறுக்கப்பட்ட நாட்டில் சுந்திர தினம் எதற்கு, பதில் கூறு பதில் கூறு காணாமல் ஆக்கப்பட்ட உறவுக்களுக்கு பதில் கூறு? சர்வதேச நீதி மன்றில் இலங்கை அரசை நிறுத்து, எங்களுக்கு சர்வதேச விசாரணையே தேவை போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளுடன் பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன், முன்னாள் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா மற்றும் கிளிநொச்சி தமிழரசு கட்சியினர் கலந்துகொண்ட தரப்பினர் ஒரு புறமாக கந்தசுவாமி கோவில் நின்றபடி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.


இதேவேளை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கஜேந்திரன், சுகாஸ், மணிவண்ணன் ஆகியோர் கலந்துகொண்ட தரப்பினர் இன்னொரு புறமாக கறுப்பு கொடிகளை ஏந்தியவாறு பெப்ரவரி 4 சிறிலங்காவுக்கு சுதந்திரநாள் அது தமிழ் மக்களுக்கு கரிநாள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு உள்ளக விசாரணை மூலம் நீதி கிடைக்காது. நாட்டின் சுதந்திரம் சிங்களவருக்கு மட்டும்தானா? போன்ற வாசகங்களுடன் ஒரு அணியினரின் ஆலயத்தின் முன் பகுதியின் வலது பக்கமாகவும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். பின்னர் இவர்கள் அங்கிருந்து புறப்பட்டு பழைய கச்சேசரி வரை ஊர்வலமாக சென்றனர்.


ஆனால் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் அவர்கள் கலந்துகொண்ட தரப்பினர் ஆலய முன்றலில் நின்றவாறே தங்களின் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com