றிசார்ட்டின் தொப்பி பிரள்கின்றது.
சர்ச்சைக்குரிய அரசியல் பேர்வழியான றிசார்ட் பதுயுதீன் அடுத்த தேர்தலில் பல்டி அடிப்பதற்கு தயாராகிவருவதாக அறியமுடிகின்றது. கடந்த காலங்களில் காலத்திற்கேற்றவாறு கூட்டுக்களை தெரிவுசெய்து சுகபோகம் அனுபவித்து வந்தவர் றிசார்ட் பதுயுதீன். ஆனால் மோசடியாக சொத்துச் சேர்ந்துள்ளார் என்ற குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ள அவர் எதிர்வரும் தேர்தலில் சஜித் கூட்டிலிருந்து வெளியேறி தனியாக தேர்தலை சந்திப்பதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்.
றிசார்ட் தன் மீது சுமத்தப்பட்டுள்ள மோசடிக்குற்றச்சாட்டுக்களால் திணறடிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இன்று இரு தெரிவுகள் வழங்கப்பட்டுள்ளது. முதலாவது தெரிவு ராஜபக்சர்களின் நிகழச்சி நிரலுக்கேற்றவாறு அரசியலை மேற்கொள்வது. இரண்டாவது தெரிவு சஜித் பிறேமதாஸ தலைமையிலான கூட்டுடன் இணைந்து செல்வது.
இதில் இரண்டாவது தெரிவை அவர் தெரிவு செய்தால் கொழும்பு மகசின் சிறைச்சாலையிலிருந்தே விருப்பு வாக்குகோரவேண்டிவரும் என்பது றிசார்ட் நன்கு அறிந்த விடயம். காரணம் கடந்த காலங்களில் அரச சொத்துக்களையும் அரச பலத்தையும் அவர் அந்த அளவுக்கு துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
மன்னாரிலிருந்து சொப்பின் பையுடன் விரட்டப்பட்டவன் என அழுதழுது அரசியல் செய்யும் அவர் சொப்பின் பேக்குடன் 90ம் ஆண்டு வந்த தங்களுக்கு 30 வருடங்களில் இத்தனை சொத்தும் எவ்வாறு வந்தது என்ற கேள்விக்கு பதிலளிக்கவேண்டும். இக்கேள்விக்கு பதிலளிப்பது இலகுவான காரியம் அல்லவாகையால் அவர் தற்போது ராஜபக்சர்களின் பாதங்களில் வீழ்ந்துள்ளதாக அறியக்கிடைக்கின்றது:
அண்மையில் காணி மோசடிக்குற்றச்சாட்டில் றிசார்ட்டின் சகோதரன் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் அடைக்கப்பட்டார். அத்துடன் அவரது மனைவி கைதாவதற்கு தயாராகவிருந்தார். சகாக்களும் வெலிக்கடைக்கான தமது பைகளை தயார்ப்படுத்தி வைத்திருந்தனர்.
இந்நிலையில் ராஜபக்சர்களில் பாதங்களைத் தேடியோடிய றிசார்ட்டிற்கு என்ன செய்யவேண்டும் என்று அவர்கள் திட்டம் வகுத்து கொடுத்துள்ளனர். அதன் பிரகாரம் அவர் எதிர்வரும் தேர்தலில் தனித்து போட்டியிடவேண்டும். அவ்வாறு தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்று வந்தாலும் அரசில் இணைத்துக்கொள்ளப்படமாட்டார். பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படவேண்டும். வாக்களிப்புக்களின்போது ராஜபக்சர்களின் விருப்புக்கேற்றவாறு செயற்படவேண்டும். இவ்வளவுதான் தற்போது றிசாட்டிற்கு விடுக்கப்பட்டுள்ள கட்டளை.
இத்தனைக்கும் ஆமாம் சேர் என்று கூறி சகோதரனை பிணையில் எடுத்துக்கொண்டுள்ளதுடன் மனைவியின் கைதையும் தவிர்த்துக்கொண்டுள்ளார் றிசார்ட் பதுயுதீன்.
திரைமறைவில் நடப்பவற்றை அறிந்து கொள்ளவேண்டுமா? இலங்கைநெட்டுடன் இணைந்திருங்கள்..
0 comments :
Post a Comment