Monday, February 10, 2020

இன்று கூடிய ஐதேக கூட்டத்தில் யானையை ஆதரித்தார் ரணில்.. எதிர்ப்புத் தெரிவித்தார் சஜித்

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பனிப்போர் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளன. வெளிப்படையாகவும், இரகசியமாகவும் பல்வேறு முன்னெடுப்புக்கள் இடம்பெற்ற வண்ணமே உள்ளன. அந்த வகையில் இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டமும் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று செயற்குழுக் கூட்டம் இடம்பெற்றுக் கொண்டிருந்தபோதே, சஜித் பிரேமதாசவும் அவருடன் கைகோர்த்திருப்பவர்களும் அவ்விடத்தை விட்டு நழுவியுள்ளனர்.

இன்றைய கூட்டம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கரமசிங்கவின் தலைமையிலேய இடம்பெற்றிருக்கின்றது. இதில் சென்ற முறை இடம்பெற்ற கூட்டத்தைப் பகிஷ்கரித்த சஜித் அணியினரும் இன்றைய கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

அங்கு பல்வேறு கசமுசாக்கள் இடம்பெற்றுள்ளன. அச்சந்தர்ப்பத்தில் ரணில் விக்கிரமசிங்க, புதிய கூட்டணியின் பொதுச் செயலாளர் பதவியை ரஞ்சித் மத்தும பண்டாரவுக்கு வழங்குவதில் ஏதும் பிரச்சினை இல்லை எனவும், ஆனால் அந்தப் புதிய கூட்டணியின் குறியீடாக யானையே இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சஜித்தின் பேச்சுக்கு எதிர்ப்பினை ரணில் காட்டுவது போலவே, சஜித்தும் ரணிலின் பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தான் ஐக்கிய தேசியக் கட்சியின் சின்னமான யானைச் சின்னத்தை விரும்புவதாகவும், தனது தந்தை ரணசிங்க பிரேமதாசவும் அக்கட்சிக்காக முழு மூச்சாக ஈடுபட்டு, அந்தச் சின்னத்திற்காக உழைத்துத் தேய்ந்து பின்னர் அக்கட்சியிலேயே உயிரைத் தியாகம் செய்தவர் என்று குறிப்பிட்டுவிட்டு, என்றாலும் பலர் சேர்ந்து புதிதாக நிர்மாணிக்கின்ற கூட்டணியின் குறியீடாக புதியதாெரு குறியீடே உபயோகப்படுத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

சஜித்தின் பேச்சைச் சகிக்கவியலாமல் ரணில் குழுவினர் அடிக்கடி பல்வேறு மாற்றுக் கருத்துக்களைக் கூறிக்கொண்டே வந்துள்ளனர். தலையிடி தாங்கவியலாமல் சஜித் அணியினர் அங்கிருந்து விரைந்து சென்றுள்ளனர்.

1 comments :

S.Jesunesan ,  February 10, 2020 at 6:45 PM  

இலங்கையிலோ வேறெந்த நாட்டிலோ ஒரு அரசியல் கட்சியை பிறிதொரு கட்சி அழித்ததாக வரலாறு இல்லை. அக்கட்சியிலுள்ளவர்களாலேயே அழிக்கப்பட்டிருக்கும். ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மைத்தரி அழித்தார். ஐதேகவை ரணில் சஜித் அழித்துக்ெகாண்டிருக்கின்றனர். இது காலத்தின் தேவை. எதுவும் நிரந்தரமில்லை. "Nothing is permanent" - Lord Buddha.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com