Wednesday, February 12, 2020

நில நடுக்கத்தினால் இலங்கைக்கு இலங்கைக்கு ஆபத்து இல்லை

இலங்கைக்கு சுனாமி அனர்த்தம் இல்லை என்று வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை நிலையத்தினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்துமா சமுத்திரத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை இன்று அதிகாலை 2.34 மணிக்கு விடுக்கப்பட்டிருந்தது. வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை நிலையத்தினால் இந்த அறிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நில நடுக்கத்தினால் இலங்கைக்கு எந்த ஆபத்தும் இல்லை, இலங்கையின் கரையோர பகுதிகள் பாதுக்காப்பானவையாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அதிகாரம் பெற்ற உள்ளூர், வெளிநாட்டு ஸ்தாபனங்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டு இந்த அறிக்கை வெளியிடப்பட்டிருப்பதாக தேசிய சுனாமி முன்னெச்சிக்கை நிலையத்தினால் விடுக்கப்ட்ட அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, கடல் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடும் காற்று, கடல் கொந்தழிப்பு தொடர்பாக வளிமண்டவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இன்று காலை 11.00 மணி வரையில் மன்னாரில் இருந்து கொழும்பு ஊடாக புத்தளம் மற்றும் காலியில் இருந்து பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிரதேசத்தில் காற்றின் வேகம் அதிகரிக்க கூடும்.

காற்றின் வேகம் இப் பிரதேசத்தில் 50 தொடக்கம் 60 கிலோ மீற்றர் வேகத்தில் வீசக்கூடும். ஏனைய கடல் பிரதேசம் அடிக்கடி ஓரளவிற்கு கொந்தழிப்புடன் காணப்படும். இந்த பிரதேசத்தில் 45 தொடக்கம் 50 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.

கடல் தொழிலாளர்கள், கடல் நடவடிக்கையில் ஈடுபடுவோர் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment