அரசுக்கு சவால்விடுத்து தமிழில் தேசிய கீதம் பாடிய சிங்களவர்கள்! வீடியோ
இலங்கையின் தேசிய தின நிகழ்வுகளின்போது சிங்கள மொழில் மாத்திரமே தேசிய கீதம் பாடப்படும் என அரசு அறிவித்ததாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் பல சர்ச்சைகள் எழுந்திருந்து. அதன்போது கருத்து வெளியிட்டிருந்த பிரதமர் அரசாங்கம் அவ்வாறான எந்த முடிவையும் எடுத்திருக்கவில்லை என தெரிவித்திருந்தார்.
எது எவ்வாறாயினும் இறுதி நேரத்தில் தமிழில் தேசிய கீதம் பாடமுடியாது என ஜனாதிபதி கோத்தபாய அறிவித்ததை அடுத்து தேசிய தின நிகழ்வில் சிங்களத்தில் மாத்திரம் தேசிய கீதம் பாடப்பட்டுள்ளது.
அரசின் இச்செயற்பாட்டிற்கு கண்டனமும் எதிர்ப்பும் தெரிவிக்குமுகமாக கொழும்பிலுள்ள சிங்கள மக்கள் சிலர் இணைந்து தமிழில் தேசிய கீதம் பாடியுள்ளனர்.
விடுதலை இயக்கம் என்கிற அரச சார்பற்ற சிவில் அமைப்பு ஒன்று கொழும்பு பொறளை பொது மயானச் சந்தியில் இன்று காலை 09 மணியளவில் தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு நிகழ்வொன்றை நடத்தியது.
இதில், சிவில் சமூக ஆர்வலர்கள் பலரும் அதேபோல ஐக்கிய சோஷலிசக் கட்சியின் தலைவரும், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டவருமான சிறிதுங்க ஜயசூரிய உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இந்த நிகழ்வில் ஆரம்பத்தில் சிங்கள மொழியில் இலங்கையின் தேசிய கீதம் பாடப்பட்டது. பின்னர் தமிழ் மொழியிலும் பாடப்பட்டது.
இந்த நிகழ்வு இடம்பெற்ற பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது.
1 comments :
Thanks Comrade. You are the last hope to our beautiful Island country
Post a Comment