Tuesday, February 18, 2020

நிஸாந்த சில்வா மீது மேலுமோர் குற்றச்சாட்டு.. வித்தியா கொலைக்குற்றவாளிகளின் வாகனத்தை பயன் படுத்தினாராம்..

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கில் கைதான சந்தேகநபருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிள் ஒன்றை வழக்கின் பொருளாக நீதிமன்றில் ஒப்படைக்காது 5 வருடங்கள் வரையான காலங்கள் பொலிஸ் குற்றப்புலனாய்வு அதிகாரி நிசாந்த சில்வா தனது சொந்த பாவனைக்காக பயன்படுத்தியுள்ளதாக தெரிவிக்கபடும் சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

வித்தியாவின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் மோட்டார் சைக்கிளை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் யாழ்ப்பாண அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ளப்பட்டதாகவும் அதன் பின்னர் பொலிஸ் அதிகாரிகள் குறித்த வண்டிக்கு பொய்யான இலக்கத் தகடை பொறுத்தி பயன்படுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாணவியின் கொலை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக நிசாந்த சில்வா கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்த வேளையிலேயே குறித்த மோட்டார் சைக்கிளை தனது சொந்த பாவனைக்காக உபயோகப்படுத்தியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய குற்றப்புலாய்வுத் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட பொலிஸ் குழுவொன்று யாழ்ப்பாணத்திற்க சென்று சம்பவம் குறித்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி கூறியுள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிளை வழக்கின் பொருளாக கருதி நீதிமன்றத்திடம் ஒப்படைக்காது தனது சொந்த பாவைக்காக பயன்படுத்தியமை சட்ட விரோதமான செயல் எனவும் பொலிஸ் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

இதேவளை சுவிஸ் தூதரக அதிகாரி கார்னியா பெரிஸ்டர் கடத்தப்பட்டதாக கூறப்படும் வழக்கிலும் முன்னாள் பொலிஸ் குற்றப்புலனாய்வு அதிகாரி நிசாந்த சில்வா தொடர்புப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment