மொட்டுவின் தாக்குதல் தளபதி தரையிறங்கினார்..
பொதுஜன பெரமுனவின் பிரதான அமைப்பாளரும் அக்கட்சியின் கொள்கை வகுப்பாளருமான பசில் ராஜபக்ச இன்று கட்டுநாயக்கவில் தரையிறங்கியுள்ளார்.
ஜனாபதித் தேர்தலின் பின்னர் அமெரிக்கா புறப்பட்டிருந்த அவர் எதிர்வரும் பொதுத்தேர்தலை சந்திப்பதற்காக நாடு திரும்பியுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.
அமெரிக்காவில் இருந்து இன்று காலை நாடு திரும்பிய அவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில், நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை மிகவும் சக்தியான கூட்டணியாக எதிர்கொள்வதாக குறிப்பிட்டார்.
மார்ச் மாதம் முதல் வாரத்தில் பாராளுமன்றம் கலைக்கப்படும் என்று ஜனாதிபதியும்இ பிரதமரும் தெரிவித்துள்ளார்கள். மக்களுக்கு சேவையாற்ற வேண்டுமாயின் நிலையான பாராளுமன்றம் தோற்றுவிக்கப்பட வேண்டும். மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடனான அரசாங்கத்தை ஸ்தாபிப்பதே தற்போதைய பிரதான எதிர்பார்ப்பாக காணப்படுகின்றது.
பொதுத்தேர்தலுக்கான கூட்டணி குறித்து எவ்வித தீர்மானங்களையும் இதுவரையில் எடுக்கவில்லை. ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியினரும்இ பொதுஜன பெரமுனவினரும் வெற்றிப் பெறும் சின்னத்திலே போட்டிப் பெறுவார்கள் என்றும் அவர் கூறினார்.
எதிர்வரும் தேர்தலில் போட்டியிடவுள்ள அவர்இ தனது அமெரிக்க பிரஜாவுரிமையை நீக்கிக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அறியமுடிகின்ற
0 comments :
Post a Comment