Tuesday, February 25, 2020

சுவிட்சர்லாந்திலும் கொரோனா!

கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட நிலையில் 70 வயது நபர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். லுகானோ என்ற மாநில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரது நெருங்கிய உறவுகளை பரிசோதிப்பதற்கு வைத்தியசாலை வட்டாரங்கள் முயற்சித்துவருவதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இதுவரையில் 80 பேர் வரை தங்களை பரிசோதனைக்கு உட்படுத்தி கொண்டுள்ளபோதும், எவ்வித முடிவுகளும் இதுவரை வெளியாகவில்லை என தெரியவருகின்றது.

இதேநேரம் மக்களை பொறுப்புணர்வுடன் செயற்பட்டுக்கொள்ளமாறு அந்நாட்டு அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. நோய்கான அறிகுறிகள் தென்படுபவர்களை வேலைத்தலங்களுக்கோ மக்கள் நெருக்கமான இடங்களுக்கோ செல்லவேண்டாம் என அரசு வேண்டுதல் விடுத்துள்ளது.

சீனாவிற்கு விடுமுறை சென்றுவந்த வயோதிபர் ஒருவர் நோயை இந்தாலிக்கு காவிச் சென்றதை அடுத்து அந்நாட்டில் மிக வேகமாக நோய் பரவியுள்ளது. இதுவரை 8 உயிரிழந்துள்ளதுடன் சுமார் 200 பேர்வரை நோய்தொற்றுக்குள்ளாகிள்ளதாக தகவல்கள் கூறுகின்றது.

இதனால் உசார் அடைந்த சுவிட்சர்லாந்து தங்களை தாயார்படுத்தி கொண்டுள்ளதாக சுவிட்சர்லாந்தில் நோய்தொற்று ஆபத்துள்ள இத்தாலிக்கு மிக அருகாமையிலுள்ள ரெசின் மாநில சுகாதார திணைக்களம் அறிவித்துள்ளது. வைத்தியசாலை ஊழியர்களுக்கோ நோயாளிகளுக்கோ தொற்று ஏற்படாவண்ணம் செயல்முறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அத்திணைக்களம் அறிவித்துள்ளது.

நோய்தொற்றுக்கு உள்ளாகியுள்ளவர்களை மற்றவர்களுக்கு தொற்றாதவாறு தனிமைப்படுத்தி வைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது. அத்துடன் இத்தாலியிலிருந்து சுவிட்சர்லாந்துக்குள் நுழைந்தவர்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்களை அவதானிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் சுகாதார திணைக்களம் அறிவித்து;ள்ளது.

இத்தாலியிலிருந்து அவுஸ்திரியாவுக்கான நுழைவாயில் அடைக்கப்பட்;டுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment