ஐ.நா வின் தீர்மானத்திற்கு வழங்கிய இணை அனுசரனையிலிருந்து விலகுகின்றோம். ஐ.நா விற்கு அறிவித்தார் ஆரியநாத்.
இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துதல் தொடர்பான தீர்மானத்தின் மீதான ஒத்துழைப்பை மீளப்பெற இலங்கை அரசு முடிவு செய்துள்ளதாக வெளியுறவு செயலாளர் ரவிநாத் ஆரியசிங்க ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தெரிவித்துள்ளார்.
மனித உரிமைகள் பேரவையின் தலைவர் எலிசபெத் டிச்சி பிஸ்ல்பெர்கரை (Elisabeth Tichy-Fisslberger) சந்தித்த வெளியுறவு செயலாளர், இலங்கை அரசு எடுத்த முடிவு குறித்து தகவல் அளித்துள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது கூட்டத் தொடர் நாளை ஆரம்பமாகின்றது. மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது கூட்டத்தொடர் மார்ச் மாதம் 20ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
இலங்கை தொடர்பான, மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் அறிக்கை எதிர்வரும் 27ஆம் திகதி மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டு, உறுப்பு நாடுகளினால் விவாதிக்கப்படவுள்ளது.
இந்நிலையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துதல் தொடர்பான தீர்மானத்தின் மீதான ஒத்துழைப்பை மீளப்பெற இலங்கை அரசு எடுத்த முடிவு, 30 ஒக்டோபர் 2015 மற்றும் மார்ச் 2017 மாநாட்டுக்கு முந்தைய மாநாட்டை உள்ளடக்கியது என வெளியுறவு செயலாளர், மனித உரிமைகள் பேரவையின் தலைவருக்கு தகவல் அளித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது அமர்வில் கலந்து கொள்ளும் தூதுக்குழுவிற்கு அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமை தாங்குவார்.
இதன்போது இலங்கை தொடர்பாக மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அளித்த வாய்மொழி அறிக்கைகளுக்கு அமைச்சர் தினேஷ் குணவர்தன பதிலளிப்பாரென எதிர்பார்க்கப்படுவதாக வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 comments :
Post a Comment