சாய்ந்தமருது நகர சபை தேவையான ஒன்றுதான்.. ஏன் நாங்கள் குழப்பமடைய வேண்டும்! - ஞானசாரர் அந்தர் பல்டி
சாய்ந்தமருது நகரசபை முஸ்லிம்களை உள்ளடக்கிய நகர சபையாக மாறியுள்ளமை குறித்து ஊடகவியலாளர்கள் கலகொடஅத்தே ஞானசாரவைத் தொடர்புகொண்டு, அவரது கருத்தினை வினவினர்.
அதற்கு ஞானசார தேரர் அவர்கள், முஸ்லிம்களுக்காக ஒரு நகரசபை அதாவது சாய்ந்தமருது நகர சபை உருவாகியிருப்பது குறித்து நாங்கள் ஏன் குழப்பமடைய வேண்டும். சமூக வலைத்தளங்கள் இந்தச் செய்தியைப் பூதாகரப்படுத்திக் கொண்டிருப்பதாகவும், முஸ்லிம்களுக்கென ஒரு நகரசபை உருவாகியிருப்பது தொடர்பில் நாங்கள் ஏன் தலையைப் பீய்த்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில்,
காத்தான்குடி ஸஹ்ரானுக்காக இப்போது ஏன் குழப்பம்....? ஆனாலும், தமிழர்களுக்கும் சாய்ந்தமருதில் தனியான நகரசபை உருவாக்கப்பட வேண்டும் என நாங்கள் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கின்றோம். காரணம் தொடர்ந்து 30 வருடங்களாக தமிழ் மக்கள் தங்களுக்குத் தனியான நகர சபை வேண்டும் என்று அரசாங்கத்திடம் கோரிவந்துள்ளனர் எனவும், அவர்கள் அதற்காக உண்ணாவிரதத்தில் கூட ஈடுபட்டார்கள் எனவும் ஞானசார குறிப்பிட்டார்.
சாய்ந்தமருது நகர சபை நாட்டிற்கு இடைஞ்சலாக இருக்காதா? என ஊடகவியலாளர் ஒருவர் கேட்டபோது, நாட்டைப் பிரித்து வேறாகக் கொடுக்கவில்லையே என சிரித்த வண்ணம் விடையளித்தார் கலகொடஅத்தே ஞானசார தேரர்.
ஞானசார தேரரின் இந்தக் கருத்துத் தொடர்பில் சிங்களவர்களிடையே பெரும் சலசலப்பு ஏற்பட்டு வருகின்றது. சிலர் முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில் அவருக்கு எதிராகக் கருத்துக்களை இட்டுவருவதைக் காணக்கூடியதாக உள்ளது.
'காவியுடை தரித்து அன்று ஏன் 'தம்பிலா...தம்பிலா' என்று ஏன்தான் ஓலமிட்டதாகவும், அதன் அர்த்தம் என்னவென்று தற்போது புரிகின்றது எனவும், சாய்ந்தமருதுவை நகரசபையாக மாற்றியதில் எங்களுக்கு எந்தவிதப் பிரச்சினையும் இல்லை... தமிழர்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்று சொல்கிறாரே... அவ்வாறாயின் ஏன் தேர்தல் காலத்தில் காவியுடை தரித்துக்கொண்டு இனவாதத்தைக் கட்டவிழ்க்க நடனமாடினீர்கள்?' என முகநூல் பதிவொன்றில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment