Monday, February 10, 2020

ராக்கிங் கொடுமை!! பெண் உறுப்புக்குள் மெழுகுதிரி !! கொலை செய்யப்பட்ட வரப்பிரகாஸ்!!

பகிடிவதைக்கு மரண தண்டனை மாணவர்களுக்கு இது படிப்பினை!

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட முதலாம் வருட மாணவனான செல்வவிநாயகர் வரபிரகாசை பகிடிவதைக்குட்படுத்தி கடத்திச் சென்று கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் பாலேந்திரா பிரசாத் சதீஸ்கரனுக்கு மத்திய மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி மரணதண்டனை விதித்தமை அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும்..

யாழ்.பல்கலைக்கழகம் உட்பட நாட்டிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களும் இனியாவது பகிடிவதையை முற்றாக கைவிடுவதற்கு இந்த தீர்ப்பு உதவும் என்று கல்விச் சமூகம் கருத்து வெளியிட்டுள்ளது.

வரப்பிரகாஸ் கொலை தொடர்பான வழக்கில் அவரைக் கொலை செய்த மாணவனைக் குற்றவாளியாகக் கண்ட மத்திய மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்தியதிலக்கவே குறித்த மாணவனுக்கு மரணதண்டனை விதித்தவர்.

பொறியியல் பீட முதலாம் வருட மாணவனான செல்வவிநாயகர் வரபிரகாஸ் 1997 ஆம் ஆண்டு அக்டோபர் 26 ஆம் திகதி கடத்திச் செல்லப்பட்டபோது இந்த வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள சதீஸ்கரன் சிரேஸ்ட மாணவனாவார்.

பிரதிவாதியான சதீஸ்கரன் 2004 ஆம் ஆண்டு நாட்டிலிருந்து வெளியேறிவிட்டதால் அவர் இல்லாமலே வழக்கு விசாரணை நடைபெற்றது.

பகிடிவதையால் முதலில் கொல்லப்பட்ட பேராதனை பல்கலைக்கழக பொறியியல் பீட தமிழ் மாணவன் எஸ்.வரப்பிரகாஸ்.1997 அக்டோபர் 6, பகிடிவதையால் சிறுநீரகம் செயலிழந்து மரணமானார்.

எஸ்.வரப்பிரகாஸ்

தொடர்ச்சியாக தோப்புக்கரணம் போன்ற பல உடற்பயிற்சியை செய்யுமாறு எட்டு சிரேஷ்ட தமிழ் மாணவர்கள் மிரட்டினார்கள்.

அண்ணா! என்னால் முடியாது, இயலாது Please என்று கெஞ்சினான். மூச்சு விட கஷ்டப்பட்டும், அந்த கொடிய தமிழ் பொறியியல் மாணவர்கள் கேட்கவில்லை.

யாழ்.சென்.யோண்ஸ் கல்லூரியில் அஞ்சலி நிகழ்வும் இடம்பெற்றது. ஒரு பொறியியலாளரை இழந்துவிட்டோம் என பலரும் கவலை தெரிவித்தனர். இதனை செய்தவர்களுக்கு அரசு தண்டிக்காது, இறைவன்தான் தண்டிப்பான் என்று உறவினர்கள் கூறினார்கள்.

இறுதிச்சடங்கில் கதறி அழுத பெற்றோர், உறவினர்கள். இன்றும் மறக்கமுடியாது.

இதில் தொடர்புடையவர்கள் இன்றும் உள்ளனர்.சிலர் வெளிநாடு தப்பி ஓடிவிட்டனர். வழக்கின் தீர்ப்பை அறிவித்த நீதிபதி நாட்டிலிருந்து தப்பியோடியுள்ள இந்தக் குற்றவாளியை சர்வதேச பொலிஸாரின் இன்டர்போல் உதவியுடன் கைது செய்வதற்கான நடவடிக்கையினை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

இவர்களின் பெயர் விபரங்கள் பத்திரிகைகளுக்கு கிடைத்தன. ஆனால் பிரசுரிக்கவில்லை. இன்றும் அவர்களின் பெயர் விபரங்கள் சில ஊடகவியலாளர்களிடம் உள்ளன. சந்திரிகா ஆட்சியில் இடம்பெற்றது. இதனை சிங்கள அரசியல்வாதிகள் தமிழ் பயங்கரவாதிகளின் பகிடிவதை என்று விமர்சித்திருந்தனர்.

இதேவேளை முதன் முதலாக பாலியல் பகிடிவதைக்குள்ளாகி தற்கொலைசெய்தவர் ரூபா ரத்னசீலி( 22 வயது)என்ற விவசாய பீட சிங்கள மாணவி.

1975 பேராதனை பல்கலைக்கழகத்தின் மேல் மாடியில் இராமநாதன் மண்டபத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்ய முயன்றார்.
பெண் உறுப்பில் மெழுகுதிரியை செலுத்தும் பாலியல் பகிடிவதை. செய்வதறியாது அவர்களை விட்டு ஓடி குதித்தார்.

ரூபா ரத்னசீலி

அன்று நவீன ஊடகங்கள் இல்லை . சகல தமிழ், சிங்கள, ஆங்கில பத்திரிகைகளில் முன்பக்கச்செய்தி. நாடு முழுவதும் இது பரபரப்பு.

பிரதமர் ஶ்ரீமாவோ ஆட்சியில் இடம்பெற்றது. பாராளுமன்றத்தில் எதிரக்கட்சியான ஐ.தே.க. கேள்வி எழுப்பியது. கல்வி அமைச்சர் பதியுதீன் மஹ்முத்விசாரணை குழு என்று இன்றுபோல பதிலளித்தார்.

ரூபா முறிவு ஏற்பட்டு சக்கர நாற்காலியில் நடமாடினார். பின்னர் 1992 இல் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார்.

அன்று பேராதனையில் நேரில் கேட்டனர், கண்டனர், மாணவி தற்கொலை. இன்று யாழ்.செல் போனில் கேட்டனர், காண்பதற்கு முன் மாணவி தற்கொலை முயற்சி.

இதே போல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட அனைத்து மாணவர்களுக்கும் படிப்பினையாக அமைய வேண்டும். கல்வி கற்று வெளியேறி பெற்றோருக்கும் சமூகத்திற்கும் சேவையாற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு வருகின்ற மாணவ, மாணவியர்களுடன் பகிடிவதை என்ற பெயரில் விளையாடுகின்ற சிரேஸ்ட மாணவர்களுக்கு இந்த தீர்ப்பு முன்னுதாரணமாக அமைய வேண்டும்.

இனிமேலாவது யாழ்.பல்கலைக்கழகம் உட்பட எந்தப் பல்கலைக்கழகத்திலும் ராகிங் என்ற பகிடிவதை இல்லாதொழிய வேண்டும் என்று கல்விச் சமூகம் கருத்து வெளியிட்டுள்ளது.

வம்பன் நெட் லிருந்து..

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com